பக்கங்கள்

திங்கள், ஜூலை 13, 2020

சிந்தனை செய் மனமே (69) புலால் உணவும் புதிய நோய்களும் !

பிற உயிர்களைக் கொன்று தின்பவன்  பேரழிவு  நோய்களைக் கூவி அழைக்கிறான் !


மனிதன் உண்ணும் உணவு வகைகள் இரண்டு ! அவை (01) காயுணவு (VEGETARIAN FOOD)  (02) கறியுணவு (NON-VEGETARIAN FOOD) ! காயுணவை நமக்குத் தருபவை புல், பூண்டு, செடி, கொடி, மரம் ஆகிய ஐவகை நிலத் திணைகள் (தாவரங்கள்). கறியுணவை நமக்குத் தருபவை சிற்றுயிரிகள், நீருயிரிகள், பறவைகள் மற்றும் விலங்குகள் ஆகிய நால்வகை உயிரினங்கள் !

நிலத்திணைகள் தாம் வாழும் நிலத்திலிருந்து நீரையும், உயிர்ச் சத்துகளையும் வேர் மூலம் பெறுகின்றன. சூரிய ஒளியிலிருந்து இலைகளில் உள்ள பச்சையம் மூலம் தனது உணவைத் தயாரித்துக் கொள்கிறது !

கறியுணவின் (NON-VEGETARIAN FOOD) மூலங்களான சிற்றுயிரிகள், நீருயிரிகள், பறவைகள், விலங்குகள் ஆகியவைத் தமக்கு வேண்டிய உணவினை வாய் வழியாக உட்கொள்கின்றன. !

வேர் வழியாகவும், இலை வழியாகவும் உணவைப் பெறும் நிலத்திணைகள் உள்  ஈர்ப்பவை நோய்மிகளோ (VIRUS), நுண்ணுயிரிகளோ (BACTERIA) கலவாத தூய உணவு. எனவே எந்தக் காயுணவிலும் நோய்மிகளும் (VIRUS),  நுண்ணுயிரிகளும் (BACTERIA) இருப்பதில்லை !

வாய் வழியாக உணவை உட்கொள்ளும் சிற்றுயிரிகள், நீருயிரிகள், பறவைகள், விலங்குகள் முதலியவை, உண்ணும் உணவுகள் தூய்மையானவை அல்ல ! அவை உட்கொள்ளும் உணவுடன், அவை வாழும் சூழலில் காணப்படும் நோய்மிகளையும் (VIRUS), நுண்ணுயிரிகளையும் (BACTERIA) சேர்த்தே உண்கின்றன !

நமக்குக் கறியுணவை (NON-VEGETARIAN FOOD)த்  தரும் இவற்றின் வாய், குடல் எங்கும், நோய்மிகளும் (VIRUS),, நுண்ணுயிரிகளும் (BACTERIA) நீக்கமற நிறைந்திருக்கின்றன. இந்த நோய்மிகளும் (VIRUS),  நுண்ணுயிரிகளும் (BACTERIA), அவற்றின் குருதியில் கலந்து, உடல் எங்கும் பரவி, அவற்றின் தசைகளிலும் குடிபுகுந்து அங்கு இனப்பெருக்கம் செய்து வாழ்கின்றன !

இந்த நோய்மி (VIRUS),  மற்றும் நுண்ணுயிரிகளில் (BACTERIA) வெப்பத்தால் அழியாதவையும்  இருக்கின்றன.  புலால் உணவை (NON-VEGETARIAN FOOD)த் தயாரிக்கையில், வேக வைத்தல், அவித்தல், வறுத்தல், பொரித்தல் ஆகிய எந்த முறையிலும் அழிந்து போகாத நோய்மிகளும், நுண்ணுயிரிகளும் நமது உடலுக்குள் சென்று, தசைகளில் குடியேறி, இனப்பெருக்கம் செய்து, பல்கிப் பெருகியவுடன் நம்மை நோய்வாய்ப் படுத்தி வீழ்த்திவிடுகிறது !

சீனநாட்டில் தோன்றிய  கொரோனா நோய்மி (VIRUS),  உருவான கதை இது தான் ! அங்கு நடமாடும் உயிரினங்களில், அவர்கள் தின்னாத ஒரே உயிரினம் மனிதன் தான். புழு, பூச்சி, வெட்டுக்கிளி, தேள், நண்டுவாய்க்காலி, கரப்பான் பூச்சி, வண்டு, வண்ணத்துப்பூச்சி, காடை, கௌதாரி, காக்கை, கழுகு, குருவி, பருந்து, வௌவால், ஆந்தை, நாய், பூனை என அனைத்தும் அவர்களுக்கு உணவாகின்றன. விலங்குகளில் எதையும் அவர்கள் விட்டு வைப்பதில்லை !

காட்டிலும் நாட்டிலும் எதை எதையோ தின்று உயிர்வாழும் பன்றிகளை அடித்துச் சமைத்து உண்டால், அதன் தசைகளில் ஊடுறுவியுள்ள நோய்மிகளும், நுண்ணுயிரிகளும் நமக்குத் தீங்கு செய்யாமல் நன்மையா செய்யும் ?

பிணங்களையும், அழுகிய விலங்குகளையும் உண்டு வாழும் கழுகின் கறி நமது வயிற்றுக்குள் போனால் உடலை வளர்க்குமா, நோய்களை வளர்க்குமா ?


மனிதனைத் தாக்கும்  பறவைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல்,  சிக்கன் குனியாபோன்ற நோய்களெல்லாம் விலங்குகள் மூலம் மனிதனுக்குப் பரவக் கூடியவை. இத்தகைய நோய்களைஜுனாடிக் நோய்கள்  என்கின்றனர். இப்போது உலகையே  அச்சுறுத்திக் கொண்டிருக்கும்கொரோனாவும் இந்த வகையே. சீனாவில் இப்போது பரவி வரும்போனிக் பிளேக்என்னும் கொள்ளை நோயும்
மர்மோட்என்னும் காட்டு அணிலை வேடையாடி உண்டதால் ஏற்பட்ட விளைவு என்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. மொத்தத்தில், விலங்குகளின் இறைச்சி அனைத்துமே மனிதனுக்கு நோயைப் பரப்பும் ஊடகமாக இருந்து வருகிறது.


தன் உடலை பருக்கச் செய்வதற்காக, மற்ற உயிர்களின் உடலைத் தின்கின்றவன் எவ்வாறு அருள் உடையவனாக இருக்க முடியும் என்று கேட்கிறார் வள்ளுவர். “தன் ஊன் பெருக்கற்குத் தான் பிறிது ஊன் உண்பான், எங்ஙனம் ஆளும் அருள் “ (குறள்.251). அருள் வற்றிப் போய்விட்டதாலோ என்னவோ, தன் நாட்டின் நாற்புறமும் நாடு பிடிக்கும் ஆசை கொண்டு அலைகிறார்கள் சீனர்கள் !

சீன நாட்டில் ஊகான் மாநிலத்தில் தின்னக் கூடாத ஏதோ ஒரு உயிரினத்தைத் தின்று, அதன் விளைவாகக் கொரோனா அங்கு முளைத்தெழுந்தது ! பல்லாயிரம் சீனர்களையே பலி கொண்ட இந்தக் கொரோனா இன்று உலக மக்களையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.  ஐந்து இலக்கத்திற்கும் (5 இலட்சம்) அதிகமான உயிர்களைப் பலிகொண்டிருக்கிறது !

இத்துணை உயிர் இழப்புகள் ஏற்பட்டும், சீன நாட்டினருக்கு இன்னும் நல்லறிவு வரவில்லை. சீனக்காடுகளில் வாழும் ஒருவகை அணிலை வேட்டையாடித் தின்றதால், அதிலிருந்து பரவிய நோய்மியால் (VIRUS), அங்குபிளேக்என்னும் கொடிய நோய் இப்போது பரவி வருவதாக  ஊடகங்கள் செய்தி வெளியிட்டு    வருகின்றன ! நாவைக் கட்டுப்படுத்தத் தெரியாத சீனர்களால் உலகெங்கும் புதுப் புது நோய்மிகள் (VIRUS), தோன்றி மனித  குலத்தையே அச்சத்திற்கு உள்ளாக்கி வருகிறது !

உலகில் படைக்கப்பட்ட அத்துணை உயிர்களும் தனக்காகவே என்று கருதும் சீன நாட்டினரின் கொள்கை அவர்களது தன்முனைப்பையே (ஆணவம்) பறைசாற்றுகிறது ! ஆசையை விட்டொழியுங்கள் என்று சொன்ன புத்தரை வணங்கும் சீனர்கள் ஆசையின் மறுவடிவமாகவே உருவெடுத்து வருகின்றனர் !

நாய், பூனை, நரி உள்பட அனைத்தையும் கொன்று உண்ணும் சீனர்கள், அடுத்து மனிதர்களையும் கொன்று உண்கின்ற காலம் விரைவில் வரத்தான் போகிறது.  மனைவியைக் கணவன் கொன்று உண்பான்; மாமியாரை மருமகள் கொன்று உண்பாள்; எத்துணைக் கேவலமான உணவுப் பழக்கத்தைச் சீனர்கள் பின்பற்றுகிறார்கள் ! 

நம் நாட்டிலும் புலால் உண்பவர்கள் நிரம்பவே இருக்கிறார்கள்; நல்லவேளையாக அவர்கள் ஆடு, மாடு, கோழி, மீன், நண்டு என்ற அளவில் தமது ஆசைகளை அடக்கி வைத்திருக்கிறார்கள். பன்றி, எருமை, ஒட்டகம் உண்பவர்கள் இருந்தாலும் அவர்கள் மிகச் சிறுபான்மையினரே !

எந்த விலங்கு அல்லது பறவை அல்லது மீனின் கறியாக இருந்தாலும் சரி, அதில் நோய்மிகளோ, நுண்ணுயிரிகளோ இல்லை என்று யாரேனும் கூறமுடியுமா ? ஆடு, மாடு ஆகியவை புல், பூண்டு, செடி, கொடிகளை மட்டுமே உண்பதால், அவற்றின் கறியில் நோய்மிகளும், நுண்ணுயிரிகளும் மிகக் குறைவாக இருக்கும் !

ஆனால், பூச்சி, புழுக்களை உண்ணும் பறவைகள், அழுகிய உடல்களைக் கொத்தித் தின்னும் கடல் மீன்கள் போன்றவற்றின் கறியில் நோய்மிகளும், நுண்ணுயிரிகளும் நிரம்பவே இருக்கும் என்பதில் ஐயமில்லை !

கறியுணவை (NON-VEGETARIAN FOOD) உட்கொள்ளும் நமக்கு உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றல் இருக்கும் வரை நோய்மிகளும் நுண்ணுயிரிகளும் நம்மை ஒன்றும் செய்யா ! எப்பொழுது நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைகிறதோ அப்பொழுது, நாம் நோய்ப் படுக்கையில் வீழவதின்றும் தப்பிக்க முடியாது !

கொல்லாமை என்னும் அறத்தை மேற்கொண்டு ஒழுகுபவனை (அதாவது புலால் உண்ணாதவனை,  நோய்த் தொற்றுக்கு வாய்ப்பு இல்லாத காரணத்தால்) இறப்புக் கூட அத்துணை எளிதில் நெருங்காது என்கிறார் வள்ளுவர் !

கொல்லாமை மேற்கொண்டு ஒழுகுவான் வாழ்நாள் மேல்
செல்லாது உயிர் உண்ணும் கூற்று  (குறள்.326)

நோயற்ற வாழ்வு விரும்புவோர் கறியுணவை (NON-VEGETARIAN FOOD)த் தவிர்த்து, காயுணவு (VEGETARIAN FOOD) உட்கொள்ளல் சாலச் சிறந்தது !  ஆனால் நாட்பட்டப் பழக்கத்தை அத்துணை எளிதில் விடமுடியுமா என்று சிலர் கேட்கக்கூடும் !

கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்  (குறள்.260)

என்கிறார் திருவள்ளுவர்; எனவே,

சிந்தனை செய் மனமே ! சிந்தனை செய் ! சிந்தித்தால் நல்வழி நம் கண்களுக்குப் புலப்படாமற் போகாது !

----------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
தி.பி: 2051, ஆடவை (ஆனி),26]
{10-07-2020}
----------------------------------------------------------------------------------------------------------
      தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !
----------------------------------------------------------------------------------------------------------

2 கருத்துகள்:

  1. ஐயா,
    கட்டுரை வாசித்தேன்,நன்றி..
    சீனர்கள் கறியுணவை பச்சையாக அப்படியே சாப்பிடுவதால் virus எளிதில் தொற்றும் என கருதுகிறேன் ..
    சிலருக்கு சில காய்கறிகளும் ஒவ்வாமை ஏற்படுகிறதே!என்ன காரணம் ?

    பதிலளிநீக்கு
  2. உரம், பூச்சி மருந்து ஆகியவற்றால் அந்தக் காய்களில் படிந்துள்ள வேதிப் பொருள்களில் விளைவாக இருக்கலாம் ! அல்லது அந்தக் காயில் இயற்கையிலேயே கூடுதலாக உள்ளுறைந்து இருக்கின்ற சில வேதிப் பொருள்களின் எதிர்வினையால் இருக்கலாம் ! ஆனால் இது அரிதாகவே நிகழக் கூடியது !

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .