பக்கங்கள்

ஞாயிறு, ஏப்ரல் 05, 2020

வடமொழி - தமிழ்ப் பெயர்கள் (04) “ச” முதல் “சௌ” வரை !


தமிழில்  பெயர் சூட்டுவோம் !


“ச” வரிசையில் தொடங்கும்  வடமொழிப் பெயர்கள்.

வழக்கில் உள்ள வடமொழிப் பெயர்களும் அவற்றுக்குப் பொருத்தமான  தமிழ்ப் பெயர்களும் !
----------------------------------------------------------------------------------------------

சகஸ்ரநாமம் (1000 பெயர்கள்)....= திருமால்
சகாயம் (சகாயம்=நயம்)...............= நயனரசு
சக்கரதாரி. (சக்கரம் = ஆழி).........= ஆழிவேந்தன்
சக்கரபாணி. (சக்கரமேந்தி).........= ஆழியரசு
சக்கரவர்த்தி......................................= மன்னர்மன்னன்
சக்தி.....................................................= ஆற்றலரசி
சங்கரநாராயணன்.........................= சிவமாலன்
சங்கரன் (நன்மை செய்பவன்).....= சிவன்
சங்கரி..................................................= உமையம்மை
சங்கீதா...............................................= இசையரசி
சசி (நிலவு)..........................................= நிலவரசி
சசிதரன்...............................................= பிறைசூடி
சசிபூஷன்............................................= மதிசூடி
சச்சிதானந்தன்.................................= மெய்யறிவின்பன்
சச்சிதானந்தன்..................................= சிவன்
சஞ்சய்  (புரோகிதன்.)......................= திருமகன்
சஞ்சலா.................................................= திருமகள்
சடாட்சரம் (ஆறெழுத்தன்)..............= திருமுருகன்
சடையப்பன் (சிவன்).........................= அழல்வண்ணன்
சட்டநாதன்  .........................................= ஆறுமுகன்
சண்முகசுந்தரம்.................................= குறிஞ்சிவேந்தன்
சண்முகம்............................................= ஆறுமுகன்
சண்முகன்...........................................= ஆறுமுகன்
சதாசிவம்.............................................= அருளாளன்
சதாசிவன் (நல்லான்).......................= கோமகன்
சதானந்தன்.........................................= பேரின்பன்
சதிஷ் (சதி=பார்வதி)........................= சிவன்
சதிஷ்குமார்........................................= திருமுருகன்
சத்தியவதி   .........................................= மெய்ப்பாவை
சத்தியவாணி......................................= நன்மொழி
சத்தியன்..............................................= மெய்யரசு
சத்தியா.................................................= மெய்யரசி
சந்தானகிருஷ்ணன்..........................= இளங்கண்ணன்
சந்தானம் (செல்வம்).........................= திருச்செல்வம்
சந்தியா (காலை,மாலை).................= வைகறைச்செல்வி
சந்திரகாந்தா (காந்தி=ஒளி)............= மதியொளி
சந்திரசூடன..........................................= பிறைசூடி
சந்திரசேகரன்.....................................= பிறைசூடி
சந்திரமதி..............................................= வெண்மதி
சந்திரமௌலி.......................................= பிறைமுடி
சந்திரன்.................................................= மதியரசு
சந்திரிகா...............................................= நிலாமகள்
சபாநாயகம்..........................................= அம்பலவாணன்
சபாபதி...................................................= மன்றவாணன்
சமரசம்...................................................= அமைதிவேந்தன்
சமுத்திரம்.............................................= கடலரசு
சம்பத்.....................................................= செல்வம்
சம்பந்தம்..............................................= உறவண்ணல்
சம்பூர்ணம் (நிறைவு)........................= நிறைமதி
சம்மந்தன்    (செல்வம்)......................= திருச்செல்வம்
சம்யுக்தா (சம்யுக்த=கூடல்).............= கூடலழகி
சரசு (பொய்கை)..................................= பொய்கைச்செல்வி
சரசுவதி..................................................= நாமகள்
சரண்யா (சரண்=புகலடைவு)...........= புகலரசி
சரவணக்குமார்....................................= பொய்கைச்செல்வன்
சரவணபவன்.........................................= வேலவன்
சரவணன்(சரவணம்=நாணல்)..........= திருமுருகன்
சரளா (சரளம்= முறையாக)...............= திருமுறைச்செல்வி
சரஸ்வதி...................................................= நாமகள்
சரிதா (சரிதம்=வரலாறு/காதை).......= காதைச்செல்வி
சர்வேஸ்வரன்.........................................= பெருந்தேவன்
சவிதா.......................................................= பரிதிச் செல்வி
சவிதா.......................................................= கதிரவன்
சற்குணன் (நல்லியல்பினன்).............= நன்னம்பி
சாந்தன்....................................................= அமைதியரசு
சாந்தி (அமைதி)....................................= அமைதியரசி
சாமி..........................................................= ஆண்டவன்
சாம்பசிவன் (சாம்புவசிவன்)............= அம்மையப்பன்
சாம்பமூர்த்தி.........................................= அம்மையப்பன்
சாரங்கபாணி(சாரங்கம்=வில்)........= வில்லாளன்
சாரங்கன்...(சாரங்கம்=.சங்கு)..........= மணிவண்ணன்
சாரதா.....................................................= கலைமகள்
சாரதா.....................................................= நாவரசி
சாரதி (சாரதி=வாகன ஓட்டி)............= வலவன்
சாவித்திரி (சிவன்)...............................= சுடர்மகள்
சிகாமணி (சிகை=முடி)......................= மணிமுடி
சிங்காரம் (ஒப்பனை).........................= எழிலரசன்
சிங்காரவேலன்.....................................= எழிலன்
சிங்காரி...................................................= எழிலரசி
சிதம்பரம்................................................= சிற்றம்பலம்
சித்திரபானு............................................= கதிரவன்
சித்ரா........................................................= ஓவியா
சிநேகா.....................................................= நட்பரசி
சிநேகிதா.................................................= தோழமைச்செல்வி
சிந்தாமணி   (கேட்டதைத் தரும் மணி....................)= அருள்மணி
சியாமளா (பச்சை மேனி)...................= பசும்பாவை /பைம்பாவை
சிரஞ்சீவி (நீடு வாழ்வோன்)................= நீடுவாணன்
சிரோன்மணி (சிரம் + மணி)...............= மணிமுடி
சிலம்பன் (சிலம்பு = மலை)..................= குறிஞ்சிவேந்தன்
சிவகடாட்சம்...........................................= சிவனருள்
சிவசங்கரன் (சிவன்).............................= சுடர்வண்ணன்
சிவசைலம்.(சைலம் = மலை).............= சிவமலை
சிவதாணு.(தாணு=மலை)  ...................= சிவமலை
சிவந்தியப்பன் (சிவன்).........................= அழல்வண்ணன்
சின்மயி (சின்மயம்=அறிவு).................= அறிவழகி
சின்னராசு................................................= இளங்கோ
சின்னராஜு  ...........................................= இளவரசு
சீதளாதேவி (சீதளம்=குளிர்ச்சி)..........= குளிர்விழிக்கோதை
சீதாபதி...(இராமன)................................= எழிலரசு
சீமா (பெண்மகள்)..................................= பாவை
சீமான்........................................................= செல்வம்
சீனிவாசன் (சீ = திருமகள்)..................= தாமரைவாணன்
சுகந்தன். (சுகந்தம்=நறுமணம்) .........= நறுமணநம்பி
சுகந்தி........................................................= நறுமணநங்கை
சுகுணா.....................................................= பண்பழகி
சுசீந்திரன் (சுசி = சூரியன்)...................= கதிரவன்
சுதந்திரம்..................................................= விடுதலை
சுதர்சனம். (சக்கரம்)..............................= ஆழிவேந்தன்
சுந்தரம்.......................................................= எழிலன்
சுந்தரராஜன்.............................................= அழகரசன்
சுந்தரவல்லி..............................................= எழிற்கொடி
சுந்தரன்.......................................................= எழிலன்
சுந்தராம்பாள்...........................................= அழகம்மை
சுந்தரி.........................................................= அழகரசி
சுபா.............................................................= நற்பாவை
சுப்பிரமணியன்  .....................................= அடியார்க்கு நல்லான்
சுப்பிரமணியன்(சுப்ரம்=தூய)............= தூயமணி
சுப்புராஜ்....................................................= தூயவன்
சுமதி...........................................................= அறிவுக்கரசி
சுயம்பிரகாசம்.........................................= பேரொளி
சுயம்பு (தான் தோன்றி).........................= முகிழன்
சுயம்பு.........................................................= தாந்தோன்றி
சுருதி............................................................= இசையரசி
சுரேஷ் (சுரர்களின் ஈஸ்வரன்).............= தேவேந்தன்
சுலோச்சனா (சுலோச்சனம்=மான்)...= மான்விழி
சுவாமி.......................................................= அடிகள்
சுவாமிநாதன்..........................................= அழல் வண்ணன்
சுவேதா.....................................................= மல்லிகை
சூரியநாராயணன்.................................= பரிதிமாலன்
சூரியமூர்த்தி (பரிதி உரு)......................= கதிரவன்
சேது (சேது=சிவப்பு, அணை, ) ...........= செவ்வணை
சேதுராமன்..............................................= செங்குரிசில்
சேனாபதி.................................................= தளபதி
சேஷசாயி.(சேஷன்=பாம்பு).................= அரவணையன்
சேஷன் (அடிமை)....................................= அடியார்
சேஷன் (இளையவன்)...........................= இளவல்
சேஷாசலம்...............................................= திருமலை
சொர்ணம்.................................................= பொன்மணி
சோணாசலம்.(சோணிதம் = சிவப்பு)................= திருவண்ணாமலை
சோதி...........................................................= ஒளிமதி
சோபனா (சோபனம்=அழகு)................= எழிலரசி
சோமசுந்தரம்.............................................= மதியழகன்
சோமநாதன்................................................= மதியரசு
சோமராஜ்.....................................................= மதியரசு
சோமன்.........................................................= மதிவாணன்
சோமாஸ்கந்தன்.......................................= மதிவேலன்
சோமு.............................................................= மதியரசு
சௌந்தரம்...................................................= அழகரசி
சௌந்தரராஜன்.........................................= எழிலரசு
சௌந்தரவல்லி............................................= எழிற்கொடி
சௌந்தரி......................................................= எழிலரசி
சௌந்தர்யா.................................................= எழிலரசி
சௌந்தர்யா.................................................= அழகரசி
சௌபாக்யம்................................................= செல்வி
சௌரிராஜன்................................................= முடியரசன்

--------------------------------------------------------------------------------------------
               ஆக்கம் + இடுகை,
              வை.வேதரெத்தினம்,
             ஆட்சியர்,
             தமிழ்ப் பணி மன்றம்,
             [தி.பி.2051,மீனம்(பங்குனி)23]
                  {05-04-2020}
--------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .