பக்கங்கள்

புதன், அக்டோபர் 16, 2019

இலக்கணம் (16) பிழை என்று தெரியாமல் பிழை செய்கிறோம் !

அறியாப் பிழைகள் !

நமது அன்றாட வாழ்வில் நாம் பேசுகையிலும் எழுதுகையிலும் நம்மை அறியாமலேயே சில பிழைகள் நேர்ந்துவிடுகின்றன ! யாராவது விளக்கினால் தவிர அவை பிழையான சொற்கள் என்பது நமக்குத் தெரியாமலேயே போய்விடுகிறது !

சாலையில் இடது புறமாகச் செல்ல வேண்டும் என்று சொல்கிறோம். இந்தச் சொற்றொடரில் என்ன பிழை இருக்கிறது ? யாராவது சொல்ல முடியுமா ? சொல்லமுடியாது; ஆனாலும் அதில் பிழை இருக்கிறது ! என்ன பிழை ?

இடம் + புறம் = இடப்புறம்; இடம் + கை = இடக்கை;  இடம் + கண் = இடக்கண். “இடம்என்றால் ஆங்கிலத்தில் LEFT ! ”இடம்என்பது தான் சரியான சொல்லே தவிரஇடதுஎன்பது பிழையான வடிவம். அதுபோன்றேவலம்என்பது தான் சரியான சொல்; “வலதுஎன்பது பிழையான வடிவம் !

ஆனாலும், “இடது” ”வலதுஎன்னும் சொற்கள் நம்மோடு ஒன்றிவிட்டன !  இடது புறம்”, “இடது கை”, “இடது கண்” “”வலது சாரி”, ”வலது புறம்”, “வலது கம்யூனிசிட்என்பன போன்ற சொற்கள் நம்மை விட்டுவிடுமா என்ன ?

எனக்கு ரொம்ப நாளாக ஒரு ஆசைஎன்று சொல்லக் கேட்கிறோம். தமிழில் எந்தச் சொல்லும்கரத்தில் தொடங்காது ! அப்படி இருக்கையில்ரொம்பஎப்படி நம் நாவில் இடம் பிடித்து விட்டது ?  நிரம்பஎன்னும் சொல் தான்ரொம்பஎன்று பிழையாக உச்சரிக்கப்படுகிறது ! “ரொம்பஎன்னும் பிழையான வடிவத்திற்கு விடை கொடுத்து அனுப்புதல் தானே சரி  !

அவைகள் எப்படிக் கெட்டுப் போயின ?” என்று ஒருவர் என்னிடம் கேட்டார். அவர் பேச்சில் உள்ள பிழையை அவர் அறியவில்லை ! இதைப் படிக்கும் பலருக்கும் பிழை தெரியாமல் இருக்கலாம் ! ஒற்றைப் பொருளைக் குறிக்கும் போதுஅதுஎன்கிறோம். பல பொருள்களைக் குறிக்கும் போதுஅவைஎன்கிறோம். ”அவைஎன்பதே பன்மை; அப்புறம்அவைகள்என்பது ? பன்மைக்குப் பன்மையா ?

அதுகள்என்பதும் தவறு; “அவைகள்என்பதும் தவறு ! ”அது”, “அவைஎன்னும் சொற்களுடன் 2-ஆம் வேற்றுமை உருபான சேரும்போது அதை”,  அவற்றைஎன்று தான் வடிவம் பெறும் ! அது + = அதை; அவை + = அவற்றை ! “அவைகள்”, “அவைகளை”, “அவைகளுக்கு”, ”அவைகளில்”, என்பன போன்ற பிழையான வடிவங்களை இனிப் புறந்தள்ளுவோம் !

நாம் பேசுகின்ற சொற்கள் பலவகைப்படும். இலக்கணத்தில் அவற்றைப் பெயர்ச் சொல், வினைச் சொல், இடைச் சொல், உரிச் சொல், பெயரெச்சம், வினையெச்சம், வினையாலணையும் பெயர்  என்றெல்லாம் வகைப்படுத்திச் சொல்வார்கள் ! அவற்றுள் தொழிற் பெயர்என்பதும் ஒன்று ! தொழில், வினை இரண்டுக்கும் பொருள் ஒன்றே தான் ! ”படித்தான்என்னும் சொல்லைப் பகுத்தால், படி + த் + த் + ஆன் என்று அமையும். இவற்றுள்படிஎன்பது பகுதிஎனச் சொல்லப்படும் !

படிஎன்னும்பகுதியிலிருந்து தோன்றுவதுபடிப்புஎன்னும் தொழிற் பெயர்” ! “காண்என்னும்பகுதியிலிருந்து தோன்றுவதுகாட்சிஎன்னும் தொழிற் பெயர்” ! “வற்றுஎன்னும்பகுதியிலிருந்து தோன்றுவதுவற்றல்என்னும் தொழிற் பெயர்” !

சுண்டுஎன்னும்பகுதியிலிருந்து தோன்றுவதுசுண்டல்என்னும் தொழிற் பெயர் !” “மறஎன்னும் பகுதியிலிருந்து தோன்றுவதுமறதிஎன்னும் தொழிற் பெயர்” ! ”படிப்பு”, “காட்சி”, “வற்றல்”, “சுண்டல்”, ”மறதிஎன்னும் தொழிற் பெயர்களைப் போலமுயல்என்னும் பகுதியிலிருந்து தோன்றுவதுமுயற்சிஎன்னும் தொழிற் பெயர்” !

படித்தான்”, “படிக்கிறான்”, “படிப்பான்”, “படித்து”, “படித்த”, ”படிப்பு”,  போன்ற எந்தச் சொல்லானாலும்  படிஎன்னும்பகுதியில் இருந்துதான் உருவாகிறது ! “படிஎன்னும் பகுதி தான் இந்தச்  சொற்களின்  வேர் ! இந்த வேரிலிருந்து தான் புதிய சொற்கள் உருவாகும். வேர் இன்றி எந்தச் சொல்லும் உருவாகாது ! “படிப்புஎன்பது வேர்அன்று ! வேரிலிருந்து உருவான ஒரு கிளைச்சொல்” !

வேர்ச் சொல்அல்லாதபடிப்புஎன்னும் கிளைச்சொல்லிலிருந்து  புதிய சொற்கள் உருவாகாது !  யாராவது உருவாக்கினாலும் அதற்குப் பொருள் இருக்காது !  

(படிப்புஎன்னும் தொழிற் பெயர்ச் சொல்லிலிருந்து படிப்புத்தான், படிப்புக்கிறான், படிப்புப்பான், படிப்புத்து, படிப்புத்த என்று சொல் உருவாக்கினால் அவற்றுக்குப் பொருள் ஏது ? பொருளற்ற குருட்டுச் சொற்களன்றோ இவை ? இவ்விளக்கமே பிற தொழிற் பெயர்ச் சொற்களுக்கும் பொருந்தும் )

படிப்புஎன்பதைப் போன்ற பிற தொழிற் பெயர்ச் சொற்களானவற்றல்”, “சுண்டல்”, ”காட்சி”, “படைப்பு”, “நீச்சல்”, “இருமல்”, “துவையல்”, “உறக்கம்”, “பொரியல்”, “ஓட்டம்”, “ஆடல்”, “வாட்டம்”, ”கொலை,” ”பார்வை”,” “மறதி”, “உணர்ச்சி”, போன்ற எந்தவொரு சொல்லில் இருந்தும் புதிய சொல்லை உருவாக்க முடியாது ! யாராவது உருவாக்கினாலும் அதற்குப் பொருள் இருக்காது !

அதுபோன்றே, “முயல்என்னும் வேரிலிருந்து முயன்றான்”, “முயல்கிறான்”, “முயல்வான்”, “முயன்று”, “முயன்ற”, ”முயற்சி”,  எனப் பல சொற்கள் தோன்றும். ஆனால், “முயற்சிஎன்னும் வேர்அல்லாத ஒரு கிளையிலிருந்து  எந்தச் சொற்களையும் உருவாக்க முடியாது ! உருவாக்கினாலும் அவை பிழையானவையே ! “முயற்சித்தான்”, ”முயற்சிக்கிறான்”, ”முயற்சிப்பான்”, ”முயற்சித்து”, “முயற்சித்தபோன்ற எந்தச் சொல்லும் பிழையானவையே ! ஆனால் இவை பார்வைக்குப் பிழையில்லாச் சொற்களாகத் தோன்றுவதே மதி மயக்கத்திற்கு  இடம் தந்துவிட்டது !

முயற்சிஎன்னும் தொழிற் பெயரிலிருந்துமுயற்சித்தான்”, ”முயற்சிக்கிறான்”, ”முயற்சிப்பான்”, ”முயற்சிக்கிறேன்”, “முயற்சிப்போம்என்பன போன்ற பிழையான சொற்களை உருவாக்கிப் பயன்படுத்துவது தவறாகாது  என்றால், ”சுண்டல்என்னும் தொழிற் பெயரிலிருந்துசுண்டலித்தான்”, ”சுண்டலிக்கிறான்”, ”சுண்டலிப்பான்”, “சுண்டலிக்கிறேன்”, “சுண்டலிப்போம்”, போன்ற பொருளற்ற சொற்களும் உருவாகும் !  மறதிஎன்னும் தொழிற் பெயர்ச் சொல்லிலிருந்துமறதித்தான்”, ”மறதிக்கிறான்”, “மறதிப்பான்”, “மறதித்து”, “மறதித்த”, போன்ற பொருளற்ற சொற்களும் உருவாகும் !

இப்படித்தான், “மரணித்தாள்என்று எழுதுகிறார்கள். இச்சொல்லைப்  பகுதி, விகுதி, இடைநிலை என்று யாராவது பகுத்துக் காண்பிக்க முடியுமா ?  முடியாது ! ஏனென்றால் மரணம்என்பதே தமிழ்ச் சொல் அன்று ! “இறப்புஎன்பதே இதன் சரியான வடிவம். இறந்தாள் என்பதை இற + (ந்)த் + த் + ஆள் என்று பகுக்கலாம்; ஏனெனில் இதுதமிழ் சொல் ! வாதத்திற்காக,  மரணித்தாள் என்பதை மரணி + த் + த் + ஆள் என்று பகுத்துக் காட்டலாம்; ஆனால்மரணிஎன்று எந்தச் சொல்லும் தமிழில் இல்லை ! ”மர்என்னும் வடசொல்லின் திரிபு வடிவேமரணம்” !

ஒரு மாணவன் சுவற்றில் பல்லி ஓடுகிறது என்று எழுதியிருந்தான். இதில் என்ன தவறு ? சரியாகத் தானே தோன்றுகிறது !  இல்லை ! தவறு தான் ! எப்படி ?  சுவர் + இல் = சுவரில் என்பது தானே  சரியாகும் ! எப்படியா ?  சுவரில் என்பதை வேறு வகையாகப் பகுத்துப் பார்ப்போம் ! சுவ + ர் + இல் ! முதலாவதாகர் + இல்என்பதைச் சேர்த்தால் என்னவாகும் ? “ர் + இல் = ரில்சரிதானே ! அடுத்து, “ரில்என்பதுடன்சுவஎன்பதைச் சேருங்கள். சுவ + ரில் = சுவரில் ! இதிலிருந்து என்ன தெரிகிறது ? “சுவரில்என்பதே சரி ! “சுவற்றில்என்பது பிழை !

(தேவர் + இல் = தேவரில்; மூவர் + இல் =மூவரில்; தாயர் + இல் = தாயரில்: மலர் + இல் =மலரில்; துயர் + இல் = துயரில்; சிலர் + இல் = சிலரில்; சுவர் + இல் = சுவரில்)

இனிமேல், வாடகைக்கு வீடு விடும்போதுசுவரில் ஆணி அடிக்கக் கூடாதுஎன்று சொல்லுங்கள் ! “சுவற்றில் ஆணி அடிக்கக் கூடாதுஎன்று பிழையாகச் சொல்ல மாட்டீர்களே ?

---------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம்+இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.:2050,கன்னி (புரட்டாசி),9]
{26-09-2019}

---------------------------------------------------------------------------------------------------------
     
  “தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !

---------------------------------------------------------------------------------------------------------

நிழற்படம் (15) படமும் கதையும் !

கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும் வகை கிடைத்த  குளிர் தரு !

ஓசூரில் என் மகள் கவிக்குயில் - சிவகுமார் இணையரின் வீட்டில் ஓய்வாக இருக்கையில் எடுத்த படம்.  படம் எடுத்தவர் கீர்த்திவாசன், என் பெயரன். படம் எடுத்த நாள். 27-7-2017. அகவை.73.

---------------------------------------------------------------------------------------------------------

தஞ்சாவூரில், கண்ணம்மாள் நகர் வீட்டில் அகலறையில் (DRAWING HALL) வைத்து எடுத்த படம். படம் எடுத்த நாள்.9-5-2018. அகவை.74.

--------------------------------------------------------------------------------------------------------

தஞ்சாவூர், கண்ணம்மாள் நகர், வீட்டின் முன்றிலில் (PORTICO) வைத்து எடுத்த படம். படம் எடுத்த நாள்;  20-9-2018   அகவை. 74.

----------------------------------------------------------------------------------------------------------

தஞ்சாவூர்,இராகம் நிழற்படக் கலையகத்தில் வைத்து எடுக்கப் பெற்ற படம். படம் எடுத்த நாள்; 27-11-2018. அகவை: 74.
                                                                   
---------------------------------------------------------------------------------------------------------

தஞ்சாவூர், கண்ணம்மாள் நகரில், வீட்டின் தாழ்வாரத்தில் (SIT-OUT)  வைத்து எடுத்த படம். படம் எடுக்கப் பெற்ற நாள்; 8-6-2019.அகவை: 75.

---------------------------------------------------------------------------------------------------------

நிழற்படம் (14) படமும் கதையும் !

ஒவ்வொரு படமும்  ஒரு பாடம் ! 

தஞ்சாவூர், கண்ணம்மாள் நகர் வீட்டில், முன்றிலில் (PORTICO) வடக்கு நோக்கி நின்றபடி எடுத்த படம். படம் எடுத்த நாள். 11-11-2015. அகவை.71.

-------------------------------------------------------------------------------------------------------

 தமிழ்ப் பணி மன்றம் சார்பில் நடத்தப் பெற்ற பொங்கல் விழாக் கவிதைப் போட்டியில் வெற்றி பெற்றமைக்காக , திரு.அறிவொளி வேலாயுதத்திற்கு கவிச்சுடர் பட்டம் வழங்கி, சான்றிதழை  அவரிடம் தந்த போது எடுத்த குழுப் படத்திலிருந்து பகுத்து உருவாக்கப்பெற்ற என் படம்.  படம் எடுத்த இடம் தஞ்சாவூர், கண்ணம்மாள் நகரில் உள்ள எனது வீடு. படம் எடுத்த நாள். 21-02-2016. அகவை. 72.

--------------------------------------------------------------------------------------------------------

சென்னையிலிருந்து இளம்பரிதி கொண்டு வந்திருந்த ஆடி காரின் அருகின் நின்ற படி எடுத்துக் கொண்ட படம். படம் எடுத்த நாள். 18-12-2016.  படம் எடுத்தவர் இளம்பரிதி. அப்போது என் அகவை. 72.

---------------------------------------------------------------------------------------------------------

பஞ்சநதிக்குளம் அங்காளம்மன் கோயிலில் திருமுடி இறக்கிய பின், தஞ்சாவூர், கண்ணம்மாள் நகர் வீட்டின் அகலறையில் (DRAWING HALL) வைத்து எடுத்த படம். படம் எடுத்த நாள். 20-12-2016. அகவை.72.

--------------------------------------------------------------------------------------------------------
தஞ்சாவூர், கண்ணம்மாள் நகர் வீட்டில் அகலறையில் (DRAWING HALL) காட்சி மாடத்திற்கு (SHOW CASE) முன்பாக வைத்து எடுத்துக் கொண்ட படம்.  படம் எடுத்த நாள். 22-12-2016 அகவை.72.

---------------------------------------------------------------------------------------------------------
                                                                       
நிழற்படம் (13) படமும் கதையும் !

படங்களை வெறுப்பதும் இல்லை ! பார்ப்பதற்குச் சலிப்பு  அடைவதும் இல்லை !

தஞ்சாவூர், கண்ணம்மாள் நகர் வீட்டின் முன்புறம் நின்றபடி எடுத்த படம். பின்னணியில் தெரிவது திரு. முகமது கனி வீடும் சுற்றுச் சுவரும். படம் எடுத்த நாள். 12-7-2015. அகவை.71.

---------------------------------------------------------------------------------------------------------

தஞ்சாவூர், கண்ணம்மாள் நகர் வீட்டின் முன்புறம், சுற்றுச் சுவருக்கு உட்புறமாக முன்றிலில் (PORTICO)  நின்றபடி எடுத்த படம். பின்னணியில் தெரிவது, கொய்யாச் செடி, புங்கமரம், அரளிச் செடி ஆகியவை. படம் எடுத்த நாள். 12-7-2015. அகவை. 71.

--------------------------------------------------------------------------------------------------------

தஞ்சாவூர், கண்ணம்மாள் நகர் வீட்டில், தாழ்வாரத்தில் (SIT-OUT) சுவர் அருகில்  வடக்கு நோக்கி நின்றபடி, எடுத்த படம். படம் எடுத்த நாள். 10-11.2015. அகவை.71.

---------------------------------------------------------------------------------------------------------

தஞ்சாவூர், கண்ணம்மாள் நகர் வீட்டில், தாழ்வாரத்தில் (SIT-OUT)சுவர் அருகில் நின்றபடி எடுத்த படம். படம் எடுத்த நாள். 11-11.2015. அகவை.71.

----------------------------------------------------------------------------------------------------------

தஞ்சாவூர், கண்ணம்மாள் நகர் வீட்டில், முன்றிலில் (PORTICO) வைத்து எடுத்த படம். படம் எடுத்த நாள். 11-11.2015. அகவை.71.

-----------------------------------------------------------------------------------------------------------

நிழற்படம் (12) படமும் கதையும் !

எழினியால் சிறை பிடிக்கப்பெற்ற  ஒளி ஓவியங்கள் !

தஞ்சாவூர், கண்ணம்மாள் நகரில் உள்ள என் வீட்டின் தலைவாயிலின் உட்புறமாக அகலறையில் (DRAWING HALL)  அமர்ந்தவாறு எழினி மூலம் (MOBILE) மூல எடுத்த படம். ப்டம் எடுக்கப் பெற்ற நாள்: 13-6-2015. அகவை.71.

---------------------------------------------------------------------------------------------------------

ஓசூரில் உள்ள என் மகள் கவிக்குயில் - சிவகுமார் இணையரின் வீட்டில் 15-6-2015 அன்று எடுத்த படம். படம் எடுத்தது என் பெயரன் கீர்த்திவாசன். படம் எடுத்த நாளில் என் அகவை. 71.

--------------------------------------------------------------------------------------------------------

தஞ்சாவூர், கண்ணம்மாள் நகரில் உள்ள என் வீட்டின் தாழ்வாரத்தில் (SIT-OUT) வடக்கு நோக்கிச் சுவர் ஓரமாக  நின்றவாறு எடுத்த படம்.  படம் எடுத்த நாள்: 16-6-2015. அகவை.71.

-----------------------------------------------------------------------------------------------------------
 
தஞ்சாவூர், கண்ணம்மாள் நகர் வீட்டின் பின்புறம் தோட்டத்தில் மாமரத்தின் அருகில் நின்றவாறு எடுத்த படம். படம் எடுத்த நாள்.17-6-2015. அகவை.71

---------------------------------------------------------------------------------------------------------

திருவையாறு சென்றிருந்தபோது  ஐயாறப்பர் கோயில் மண்டகத்தில் நின்றவாறு எடுத்த படம். படம் எடுத்தநாள்: 5-7-2015. அகவை.71.

----------------------------------------------------------------------------------------------------------

நிழற்படம் (11) படமும் கதையும் !

ஒவ்வொரு படத்திற்குப் பின்னும் ஒரு வரலாறு உண்டு  !

தஞ்சாவூர், நகரம், கண்ணம்மாள் நகரில் உள்ள எனது வீட்டின் முன்  எடுத்த படம். படம் எடுக்கப் பெற்ற நாள். 30-3-2015. அகவை 71

----------------------------------------------------------------------------------------------------------

தஞ்சாவூர், கண்ணம்மாள் நகரில் உள்ள என் வீட்டின்  தாழ்வாரத்தில் (SIT-OUT) கிழக்கு நோக்கி அமர்ந்திருந்த போது எடுத்த படம். படம் எடுத்த நாள். 9-5-2015. அகவை.71.

----------------------------------------------------------------------------------------------------------
தஞ்சாவூர், கண்ணம்மாள் நகர் எனது இல்லத்தின் முன்புறம், வெளிவாயில் படலை முன்பாக  வைத்து எடுத்த படம். படம் எடுத்த நாள். 9-5-2015. அகவை.71

----------------------------------------------------------------------------------------------------------

ஓசூரில் உள்ள என் மகள் கவிக்குயில் - சிவகுமார் இணையரின் வீட்டில்  முன்றிலில் உள்ள ஊஞ்சலில் அமர்ந்தவாறு எடுத்துக் கொண்ட படம். படம் எடுத்த நாள்.5-6-2015. அகவை.71

------------------------------------------------------------------------------------------------------------

தஞ்சாவூர், கண்ணம்மாள் நகர் எனது வீட்டில் வைத்து எடுத்த படம்.படம் எடுத்த நாள். 13-6-2015. அகவை. 71.

-----------------------------------------------------------------------------------------------------------

நிழற்படம் (10) படமும் கதையும் !

உலவும் நினைவுக்  காற்றினிலே  ஒளிபெருக்கும்  நிழற்படங்கள் !

உதகமண்டலத்திற்கு (OOTY)  நானும், என் மனைவி கலைச் செல்வியும், பெயரன் கீர்த்திவாசனும் சென்றிருந்த போது  கீர்த்திவாசன் எடுத்த படம். படம் எடுக்கப் பெற்ற நாள்: 12-5-2014. அகவை; 70. 

-----------------------------------------------------------------------------------------------------------

இந்தப் படம் தஞ்சாவூர் இராகம் நிழற்படக் கலையரங்கில்  19-5-2014 அன்று எடுக்கப் பெற்றது ! அப்போது என் அகவை: 70.

----------------------------------------------------------------------------------------------------------

இந்தப் படம், தஞ்சாவூர் நகரம், நீலகிரி ஊராட்சியில் திருவள்ளுவர் குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில் நடைபெற்ற விடுதலை நாள் நிகழ்ச்சிகளின் போது எடுக்கப்பட்டது. படம் எடுக்கப் பெற்ற நாள்: 15-8-2014. அகவை; 70.

-----------------------------------------------------------------------------------------------------------

இந்தப் படம் மகாராட்டிர மாநிலம் சீரடிக்குச் சுற்றுலா சென்ற போது , திரியம்பகேசுவரர்   கோவில்  திருக்குளம் அருகில் 2-3-2015 அன்று எழினி (MOBILE) மூலம் எடுக்கப்பட்டது. அப்போது என் அகவை:71.

------------------------------------------------------------------------------------------------------------

இந்தப்படம், சீரடிச் சுற்றுலா நிறைவு பெற்று, திருத்துறைப்பூண்டி வந்த போது, திரு.ப.மா.சுப்ரமணியன் அவர்கள் இல்லத்தில் வைத்து 4-3-2015  அன்று எடுக்கப்பட்டது. அப்போது என் அகவை. 71.

-----------------------------------------------------------------------------------------------------------