பக்கங்கள்

செவ்வாய், அக்டோபர் 15, 2019

நிழற்படம் (05) படமும் கதையும் !

பொறுப்பு  நிலை உயர்கையில்,  மக்கள் பார்வையும் உயர்கிறது !



நாகப்பட்டினம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் அலுவலக மேளாளராகப் பணியாற்றிய காலை, நாகூர் ஜெமிம்மாள் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழா நிகழ்சிகளில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு  உரையாற்றிய போது எடுத்த படம். அப்போது என் அகவை 41. படம் எடுத்த நாள்:20-3-1985.



-----------------------------------------------------------------------------------------------------------

சேலம் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் அலுவலக மேலாளராகப் பணியாற்றிய போது, என் இல்லத்தாருடன் எடுத்துக் கொண்ட குழுப்படத்திலிருந்து பிரித்து உருவாக்கப்பட்ட படம். அப்போது என் அகவை 48. படம் எடுத்துக் கொண்ட நாள்:15-8-1992



----------------------------------------------------------------------------------------------------------

சேலம் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் அலுவலக மேலாளராகப் பணியாற்றிய காலை, என் தங்கை மகள் செல்வியின் திருமணம் திருத்துறைப் பூண்டியில் நடைபெற்றது அப்போது மணமக்களுடன் எடுத்துக் கொண்ட குழுப் படத்திலிருந்து பிரித்து உருவாக்கிய எனது படம். அப்போதுஎன் அகவை 51. படம் எடுத்துக் கொண்ட நாள்: 5-2-1995.




------------------------------------------------------------------------------------------------------------

ஓசூர், அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில், ஆட்சி அலுவலராகப் பணியாற்றிய காலை, ஓய்வூதியக் கருத்துரு மாநிலக் கணக்காயருக்கு அனுப்புவதற்காக நானும் என் மனைவியும் நிழற்படம் எடுத்துக் கொண்டபோது, நான் தனியாக எடுத்துக் கொண்ட படம். அப்போது என் அகவை 56. படம் எடுத்துக் கொண்ட நாள்.9-11.2000.



-----------------------------------------------------------------------------------------------------------

ஓசூர், அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் ஆட்சி அலுவலர் பணியிலிருந்து ஓய்வு பெறும் நாளில், எனது இருக்கையில் அமர்ந்திருக்கும் போது எடுத்துக் கொண்ட படம். அப்போது என் அகவை, கல்வி ஆவணங்களின்படி 58;  ஆனால் உண்மை அகவை 57. ஒரு ஆண்டு முன்னதாகவே பணியிலிருந்து ஓய்வு பெற்றேன். படம் எடுத்துக் கொண்ட நாள்: 30-4-2001


-------------------------------------------------------------------------------------------------------------

1 கருத்து:

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .