பக்கங்கள்

புதன், அக்டோபர் 09, 2019

பல்வகை (11) நால்வகை விரகுகள் !

இன்மொழி, புகழ்மொழி, தருமொழி, ஒறுப்பு !


விறகு என்றால் தெரியும்; அது என்ன விரகு ? ”ஏதாவது ஒரு உபாயத்தைக் கையாண்டு  சிக்கலிலிருந்து மீண்டு வாஎன்கிறோமே, அந்த உபாயம் என்ற வடமொழிச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் தான்  தான்விரகு” !

சரி ! அது என்ன நால்வகை விரகுகள் ? அவைதான், சாம, பேத, தான, தண்டம் என்பவை. தமிழில்இன்மொழி”, புகழ்மொழி”, “தருமொழி”, ஒறுப்பு !

நீ நல்ல குழந்தை ஆயிற்றே ; அழகான குழந்தை ஆயிற்றே; அம்மா சொல்லைத் தட்டாத குழந்தை ஆயிற்றே; இங்கே வா ! இப்படி உட்கார்; ஒரு பாட்டுப் பாடு !” எனக் கூறிக் குழந்தையின் குறும்பை அடக்குவது ஒரு முறை. இதையேசாமம்என்பர். இதைத் தமிழில்இன்மொழிஎனக் கூறலாம் !

நீ நல்ல பெண்மணி; அடுத்த வீட்டுப் பெண் இருக்கிறாளே, அவள் கெட்ட பெண்; நீ எவ்வளவு அழகாக இருக்கிறாய்; பக்கத்து வீட்டுப் பாவை இருக்கிறாளே அவள் அசடு. நீ அறிவுடையவள்; அவள் முழு மூடம்; என் கண்ணல்ல; இங்கே வா ! அமைதியாக இரு; அம்மா வேலை செய்வதைக் கவனித்துக் கொண்டிரு.” என்று அடுத்தவரோடு ஒப்பிட்டு, வேறுபடுத்தி, அடக்குவதும் ஒரு முறைஇதனைப்பேதம்என்பர். இதைபுகழ்மொழிஎனக் கூறலாம் !

என் கண்ணல்லவா நீ; என் கற்பகம் அல்லவா நீ; இங்கே வா;  உனக்குப் பால் தருகிறேன்; பழம் தருகறேன். நீ அமைதியாக இருந்தால்கொத்துச் சரமாய் முத்து மாலை வாங்கித் தருவேன்; கோவிலுக்குக் கூட்டிச் செல்வேன்; குளத்துக்கு அழைத்துச் செல்வேன், என்ற முறையில் இன்னது தருவேன்; சொன்ன படி நடந்தால் எனக் கூறி அடக்குவதும் ஒரு முறை. இதைத்தானம்என்பர். இதைதருமொழிஎன்று கூறலாம் !

சாம, பேத, தானம் என்ற மூன்று முறைகளிலும் மக்களுக்கு ஒழுக்க முறைகளைகட்டுப்பாட்டு உணர்வை -  கடமைகளை எடுத்து உரைப்பது  அறநெறி; எடுத்துரைப்பது ஒன்றே இதன்முழுமையான மெய்ப்பொருள்அதாவது தத்துவம் !

இப்போது புரிகிறதா, “சாம, பேத, தான, தண்டம்என்றால் என்ன என்று ? உங்கள் குழந்தைகளிடம் நீங்கள் எந்தவிதமான விரகு முறையைக் கையாளுகிறீர்கள்; இனியும் கையாளப் போகிறீர்கள். சொல்லுங்களேன் பின்னீடு வாயிலாக !

----------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.:2050,சுறவம், 13.]
{27-01-2019}
----------------------------------------------------------------------------------------------------------
      
 “தமிழ்ப் பணி மன்றம்முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற 
கட்டுரை !

----------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .