பக்கங்கள்

புதன், அக்டோபர் 09, 2019

பல்வகை (09) உங்களுக்குச் சீட்டு விளையாடத் தெரியுமா ?

சொல்லுங்கள் ! தெரியுமா ? தெரியாதா ?


தெரியாதா ? அப்படியென்றால் நான் சொல்லும் விளக்கம் உங்களுக்குத் தேவையில்லை. ஏனென்றால் நான் என்ன சொன்னாலும் உங்களுக்குப் புரியாது !

தெரியுமா ? அப்படியென்றால் நான் சொல்லும் செய்தியைக் கேளுங்கள். ஒரு சீட்டுக் கட்டில் 1 முதல் “K”  வரையில்  உள்ள சீட்டுகளின் மொத்த எண்ணிக்கை 52. இது ஒரு ஆண்டுக்கு 52 வாரங்கள் என்பதைக் குறிக்கிறது !

சீட்டுக் கட்டில் 4 வகை  இனங்கள் உள்ளன. (HEART, SPADE, CLUB, DIAMOND). ஒரு ஆண்டிற்கு 4 பருவங்கள்  என்பதை இது குறிக்கிறது. மொத்தம் 12 பொம்மைச் சீட்டுகள் தான் ஒரு கட்டில் இருக்கும். இது ஒரு ஆண்டுக்கு 12 மாதங்கள் என்பதைக் குறிக்கிறது !

1 முதல் 10 வரையில் உள்ள சீட்டுகளின் எண்ணிக்கை மதிப்பு உங்களுக்குத் தெரியும். அத்துடன்ஜேமதிப்பு 11, “கியூமதிப்பு 12, “கேமதிப்பு 13 என்று வைத்துக் கொண்டு  52 சீட்டுகளின் மொத்த மதிப்பையும் கணக்கிட்டுப் பாருங்கள். அவற்றின் மதிப்பு மொத்தம் 364 வரும். பள்ளியில் படித்த சூத்திரம் நினைவில் இருக்கிறதா? 13 X 14 = 182 X 4 = 728 / 2 = 364 !

சீட்டுக் கட்டில்ஜோக்கர்சீட்டும் உண்டு. இதற்கு மதிப்பு 1 எனக் கொண்டு, மொத்த எண்ணிக்கையைக் கணக்கிட்டால் 365 வரும். இது ஒரு ஆண்டுக்கு 365 நாள் என்பதைக் குறிக்கிறது !

இந்த செய்தி உங்களுக்கு இப்போது தான் தெரியும் என்றால், சீட்டு விளையாட்டில் நீங்கள் கற்றுக் குட்டி என்று பொருள் ! முன்பே தெரியும் என்றால், அதை ஏன் நீங்கள் முகநூலில் இதுவரைப் பதிவிட வில்லை ?

ஆமாம் ! கற்றுக் குட்டி என்ற சொல்லின் உண்மையான வடிவம் என்ன?  அதன் பொருள் என்ன ? சொல்லுங்களேன் !

எவ்வளவோ நல்ல செய்திகளைப் பதிவிட்டாலும் நீங்கள் அதற்குகருத்துரைஎழுதுவதே இல்லை ! இதற்கு என்ன செய்யப் போகிறீர்கள் ?

------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.:2050, சுறவம், 12.]
{26-01-2019)

----------------------------------------------------------------------------------------------------------
      
“தமிழ்ப் பணி மன்றம்முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !

----------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .