பக்கங்கள்

வெள்ளி, அக்டோபர் 04, 2019

இலக்கணம் (05) "னகர", "ணகர", "நகர' வேறுபாடு - !

சொல்லில் ”ந”, ”ன”, ” ” வரும் நேர்வுகள் !



தமிழில் “Na” என்னும் மூல ஓசைக்கு, , என்று மூன்று எழுத்துகள் இருப்பது குழப்பம் விளைவிக்கவில்லையா என்று ஒரு கேள்வி கேட்கப் பெற்றது. “வைத்ந்நகரம்என்றும்வைன்னகரம் என்றும், ”வைண்ணகரம்  என்றும்  சொல்வர் !

தந” “றன” “டணஎன்று தமிழ் நெடுங்கணக்கில் (ALPHABET) வருவதைக் காண்கிறோம். இவ்வெழுத்து இணைகள் ஒவ்வொன்றும் ஒரே இடத்தில் பிறப்பன. எனவே, அவை இன எழுத்துகள் எனப் பெற்றன.  முதலில் வரும்  மேற்கண்ட இணையில் முதலில் வரும்”, “”, “என்னும் வல்லெழுத்துகளைச் சார்ந்து வருவனவே”, ””, ”என்னும் மெல்லுழுத்துகள். வல்லெழுத்தை முன்வைத்தேந்நகரம்”, “ன்னகரம்”, “ண்ணகரம் என்கிறோம் !

எந்தஎன்னும் சொல்லைஎன்தஎன்று எழுதினால் என்ன என்று ஒருவர் கேட்டார். “ன்எழுத்தும்எழுத்தும் நம் வாயில் வெவ்வேறு இடங்களில் பிறக்கின்றன.  ன்ஐ இயல்பானபடி உச்சரித்துவிட்டு, “வை எளிதாக உச்சரிக்க முடியாது. உச்சரிப்பு இயல்பாகவும், எளிதாகவும், இனிமையாகவும் இருக்கும் பொருட்டேவுக்கு முன்னேஎழுத்து வருகிறது. அப்படியே மற்ற இணைகளுக்கும் !

என்றுஎன்பதைஎந்றுஎன எழுதுவது தவறு என்பது இந்த இயல்பான உச்சரிப்பு முறையைப் பொறுத்தேயாகும்.  கண்டுஎன்பதைக்கன்டுஎன்றோகந்டுஎன்றோ எழுதுவது, நாம் அச்சொல்லை ஒலிக்கும் இயல்பான முறைக்கு மாறாக இருக்கிறது. எனவே, அப்படி எழுதுவது தவறு என்பர் !

ஆங்கிலத்தில்வடமொழியில் கூட இவ்வேறுபாடு இல்லை.  கந்தன்”, “கன்னம்”, “கிண்ணம்என்னும் சொற்களில் வரும்ந்”, ”ன்”, ”ண்என்னும் எழுத்துகளுக்கு “N” என்னும் ஒரே ஆங்கில எழுத்தைப் பயன்படுத்தி, “KANTHAN”, “KANNAM”, KINNAM” என்று அம்மொழியில் எழுதுவோம். “அன்னா”, “அண்ணா”, “அணாஎன்னும் மூன்று தமிழ்ச் சொற்களையும் ஆங்கிலத்தில் எழுதும் போது “ANNA”  என்னும் ஒரு வகையில்தான்  வரைய முடியும். எனவே, தமிழில்”, “”, ” –க்கள் பயனுள்ளவையாக அமைந்துள்ளன என்பதை உணர வேண்டும். எழுதுபவருக்கு இடர் விளைக்க அவை புகுத்தப் பெற்றவை அல்ல !


------------------------------------------------------------------------------------------------------------

(ஆட்சிச் சொற் காவலர் கீ.இராமலிங்கனார் எழுதிய
தமிழில் எழுதுவோம்
என்னும் நூலிலிருந்து எடுக்கப்பெற்ற ஒரு பகுதி)

------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்.
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.:2050,கடகம்,26]
{11-08-2019}

------------------------------------------------------------------------------------------------------------
     
 ”தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற கட்டுரை !

------------------------------------------------------------------------------------------------------------

2 கருத்துகள்:

  1. மன்னன் என்பதை மண்ணன் என்று எழுதுவதால் என்ன தவறு

    பதிலளிநீக்கு
  2. மன் என்னும் சொல்லுக்கு அரசன், நிலைபேறு, மிகுதி எனப் பல பொருள்கள் உள. இவற்றுள் அரசன் என்னும் பொருளும் உளதால் மன் +ன் + அன் = மன்னன் என்றாயிற்று. மண் என்பதற்கு நிலம் என்று பொருள், அரசன் என்னும் பொருள் இல்லை. எனவே ”மன்னன்” என்பதை “மண்ணன்” என்று எழுதுதல் பொருளற்றதாகிவிடும்.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .