கொத்து (01)                                                                                       மலர் (028)
===========================================================================
           குமுதம் இதழில் வெளியான ஒரு படத்தை  வைத்துக்                   கொண்டு எழுதிய   ஒரு  கவிதை !
   (ஆண்டு 1970)
=========================================
நீலத் திரைவானில் நீந்திவரும் வெண்மதிபோல்
                நின்வதனம்  தோன்றுவதேன்
?  நிலவு முகத்தினிடை
            சேலிரண்டு  துள்ளுவதேன் ?  செந்தமிழின்  காவலனாம்
                சேரன்
புகழ்பாடிச்  செங்கோட்டை
மீதுயர்ந்த
            பட்டுத்  துகிற்கொடியில்  பறித்து  எடுத்ததுவோ !
                பைங்கொடியாள்  நின்புருவம் ? பவளத்துப் பாறைதனில்,
            வெட்டி எடுத்ததுவோ  வேல்விழியாள்
நின்னிதழ்கள் ?
                வெள்ளை
நறுமுல்லை  வெட்கித் தலைகுனிய,
            முத்து  மணிகொண்டு  கோத்ததுவோ பல்வரிசை ?
                முக்கனியின்  சாறெடுத்து
ஆக்கியதோ  கன்னங்கள் ?
            கத்து  கடலனையக்  காட்சிதரும்  கருங்கூந்தல்,
                கார்முகிலின்  சொத்தலவோ ? காரிகைநீ  கொண்டதுஏன் ?
            தேன்கதலித்  தண்டினிலே  வடித்ததுவோ நின்மேனி ?
                தீங்கரும்புத்  துண்டாமோ  சேயிழையாள்  நின்கரங்கள் ?
            அன்னத்தின் சிறகெடுத்து
ஆக்கியதோ  சீரடிகள் ?
                அஞ்சுகமும்
பூங்குயிலும்  அடைக்கலமோ  நின்னிடமே ?
            பொதியமலைத்  தென்றலிடைப் பூங்கொடிகள் ஆடுதல்போல்,
                புன்னகையின்  ஆட்சிதனில்  பொன்மலர்நீ  ஆடுதலால்,
            மதுவூறும்  மாமலரே ! 
மான்மறியே
!  பூம்பொழிலே !
                மல்லிகையே ! இன்றுமுதல்  பூங்கொடியே
நின்பெயராம் !
             பூங்கொடியே  நீவாழ்க !! 
நின்முறுவல்  நனிவாழ்க !
                பொன்மணியே
நீவாழ்க ! நின்மனைவாழ்க ! வாழியவே !
----------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
[veda70.vv@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப்
பணி மன்றம் முகநூல்.
-------------------------------------------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .