பக்கங்கள்

திங்கள், செப்டம்பர் 02, 2019

புதிய தமிழ்ச் சொல் (49) பகரவூசி ( STAPLE PIN )


பகரவூசி - STAPLE PIN

----------------------------------------------------------------------------------------------------------



புத்தகங்கள் தைப்பதற்கு ஊசிநூல் உதவுகிறது. கோப்புத் தாள்களைப் பிணைத்து வைக்க அலுவலகங்களில் கூர் நாடா (TAG) பயன் படுகிறது. துணியில் தையல் வேலை செய்வதற்கு தனியாக ஊசிகள் உள்ளன. தையல் ஊசி, குண்டூசி, வார்த்தாரை ஊசி, கொண்டைஊசி , கோணி ஊசி எனவும் பல்வகை ஊசிகள் பயன்பாட்டிலுள்ளன !



அளகைகளிலும் (BANKS) அலுவலகங்களிலும் தாள்களைப் பிணைத்திட STAPLE PIN பயன்படுகிறது ! STAPLE PIN என்பது வடிவம் உள்ள பிணையூசி ! இதன் வடிவத்தை வைத்து STAPLE PIN என்பதைப் பகரவூசிஎன்று சொல்லாக்கம் செய்யலாம் !



பகரவூசியைக் குத்தித் தாள்களைப் பிணைப்பதற்குச் சிறு கருவி ஒன்று பயன்படுகிறது. இந்தக் கருவிக்கு STAPLER என்று பெயர். பகரஊசியைக் குத்தித் தாள்களைப் பிணிக்க இஃது உதவுவதால் STAPLER கருவியைப் பகரப் பிணிகைஎன்று கூறலாம்.



---------------------------------------------------------------------------------------------------------




STAPLER............................=பிணிகை ( பகரப்பிணிகை)

STAPLE PIN.......................= பகர ஊசி




----------------------------------------------------------------------------------------------------------

----------------------------------------------------------------------------------------------------------

 

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்

தமிழ்ப் பணி மன்றம்.

[தி.:2050,மடங்கல்,16]

{02-09-2019}

 

-----------------------------------------------------------------------------------------------------------

 



பகரவூசி




 பிணிகை

                               

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .