பக்கங்கள்

புதன், செப்டம்பர் 04, 2019

தமிழ் (10) தமிழில் சொல் வளம் ! (அடை, நடை, படை !)


வினையடியாகப் பிறக்கும் ஈரெழுத்துத் தொழிற் பெயர்கள் !


தமிழில் சொல் வளத்திற்குக் குறைவே இல்லை; நிரம்பவே உள்ளன ! ஆழ்ந்து படிக்காததாலும், நுணுகி ஆராயத் தவறுவதாலுமே, கருத்துகளைத் தெளிவாகத் தெரிவிக்கப் போதுமான சொற்கள் தமிழில் இல்லை எனச் சிலர் குறை சொல்கின்றனர். குறை அவர்களிடம் தான் உள்ளது; தமிழில் இல்லை !  சொல் வளத்திற்கு எடுத்துக் காட்டாகச் சில சொற்களும், அப்பெயர் வரக் காரணம் என்ன என்பதும் பின்வரும் பத்தியில் விளக்கப்பட்டுள்ளது.

-----------------------------------------------------------------------------------------------------------

(ஒவ்வொரு வரி இறுதியிலும்அதன் பெயர்என்பதை (இல்லாத இடத்தில் மட்டும்)  சேர்த்துக் கொள்க!)

-----------------------------------------------------------------------------------------------------------

           அடுதல் செய்து தயாரிப்பதால்.....................= அடை (WAFER)
           (ஆடுமாடுகளை) கிடத்தி வைப்பதால்......= கிடை (HERD)
           இடுகி (ஒடுங்கி) இருப்பதால்.........................= இடை (WAIST)
           (உடலைத்) தொட்டுக்கொண்டு இருப்பது..= தொடை (THIGH)
           உடுக்கப் படுவதால் அதன் பெயர்..............= உடை (DRESS)
           (உட்பக்கம்) குடைவாக இருப்பதால்..........= குடை (UMBRELLA)
           எடுத்தல் அளவையால் காண்பது...............= எடை (WEIGHT)
           கூடு போல் பின்னப் படுவதால்....................= கூடை (BASKET)
           கொடுக்கப் படுவதால் (அதன் பெயர்)......= கொடை (GIFT)
           கோடுதல் (வெப்ப எரிவு) செய்வதால்.......= கோடை (SUMMER)
           சடைத்துப் (கிளைத்து) பின்னுவதால்........= சடை (BLAIT)
           சூடிக் கொள்வதால் அதன் பெயர்...............= சூடை (HEAD-WEAR)
           தடுக்கப் பயன்படுவதால்...............................= தடை (BRAKE)
           (தறி) நெட்டிழைக்கு ஊடே ஓடுவது............= ஊடை (WOOF)
           (தறியை) ஆட்டியாட்டி நெய்வதால்............= ஆடை (CLOTH)
           நடத்தலால் விளைவது.................................... = நடை (WALK)
           (நிறுத்துக்) கட்டி விற்குமிடம்.........................= கடை (SHOP)
           (நீர்) ஓடுதலால் உருவாவது............................= ஓடை (STREAM)
           படுக்கப் (அழிக்க) பயன்படுவதால்...........= படை (ARMY)
           பீடித்தல் (துன்பம் தரல்) செய்வதால்.........= பீடை (MISERY)
           பெட்கப் படும் (விரும்பப்படும்) பறவை...= பேடை (FEMALE BIRD)
           மடுத்தல் (தோண்டி)  செய்வதால்...............= மடை (CHANNEL)
           மூடி (கட்டி) வைப்பதால்..................................= மூடை (BAG)
           மேடாக (உயரமாக)  இருப்பதால்................= மேடை (STAGE)
           வடக்கிலிருந்து வீசுவதால்..............................= வாடை (NORTH WIND)
           வட்டித்துச் (வட்டமாக்கி) செய்வதால்.......= வடை (VADAI)
           விடுக்கப்படுவதால் (அதன் பெயர்)...........= விடை (ANSWER)


---------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.: 2050, மீனம்,09 ]
{23-03-2019}

---------------------------------------------------------------------------------------------------------

        “தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !

---------------------------------------------------------------------------------------------------------


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .