பக்கங்கள்

வெள்ளி, செப்டம்பர் 06, 2019

பெயர் விளக்கம் (14) காங்கேயன்-பெயரின் பொருள் என்ன ?


பொன்னிறத்தவன் என்பதால் முருகன் காங்கேயன் ஆனானோ !


நால்வகை நிலங்களுள் ஒன்றான குறிஞ்சி நிலம் என்பது மலையும் மலை சார்ந்த இடங்களும் ஆகும். குறிஞ்சி நிலத் தலைவனாக முருகன் கருதப்பட்டான். பிற்காலத்தில் முருகனின் தோற்றம் பற்றி பல கதைகள் உருவாயின. இதன் தொடர்ச்சியாக முருகனுக்குப் பல பெயர்கள் வழங்கலாயின. சமஸ்கிருதத்திலும் தமிழிலுமாக வங்கப்படும் முருகனின் பெயர்களையும், அவற்றுக்கு இணையான தமிழ்ப் பெயர்களையும் காண்போமா !

 ----------------------------------------------------------------------------------------------------

·         கடம்பன்................. = செந்தில் செல்வன்
·         கந்தன்..................... = முருகவேள்
·         காங்கேயன்.......... = வள்ளிமணாளன்
·         கார்த்திகேயன்.... = தணிகைச்செல்வன்
·         குமரன்.................... = எழில்வாலன்
·         குமார்...................... = சேந்தன்
·         குருசாமி...............  = திருமுருகன்
·         சடாட்சரம்.............. = பொய்கைவாணன்
·         சண்முகன்............. = ஆறுமுகன்
·         சண்முகானந்தன் = எழிலின்பன்
·         சரவணன்............... = நாணல் நாடன்
·         சரவணன்.................= பூங்குன்றன்
·         சிங்காரவேலன்... = எழில்முருகு
·         சிலம்பன்................ = குறிஞ்சி வேந்தன்
·         சுப்பிரமணியன்... = தூயமணி
·         சேனாபதி............... = வள்ளி மணாளன்
·         தண்டபாணி.......... = தணிகையரசு
·         தண்டாயுதபாணி = பொதிகைச்செல்வன்
·         பழனியப்பன்......... = பொதிகையண்ணல்
·         பழனிச்சாமி.......... = பூங்குன்றன்
·         முத்துக்குமரன்.... = மணியன்
·         முத்துச்சாமி............= மணியரசன்
·         முத்துராஜ்.............. = மணியரசு
·         முருகராஜ்............. = எழிலரசு
·         முருகன்................. = குழகன்; எழிலன்
·         முருகப்பன்........... = எழிற்செம்மல்
·         முருகு..................  = எழில்,
·         முருகேசன்........... = எழிலேந்தல்
·         முருகையன்....... = இளவழகன்
·         விசாகன்................ = தங்கவேலன்
·         வேலுச்சாமி......... = திருமுருகன்


---------------------------------------------------------------------------------------------------
02.(கந்து=தூண்)  05  (குமரன் = இளைஞன்)  08, 09; (ஷட்-சண்=ஆறு)  11, 12; (சரவணம்=நாணல்)  14. (சிலம்பு=மலை) 15.சுப்பிரமணி = (பிராமணருக்கு நல்லவன்= தூயவன்) 17,18; தண்டு = தடி 24-29. (முருகு=அழகு, இளமை)
------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
{22-12-2018}
-----------------------------------------------------------------------------------------------------
        ”தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !
------------------------------------------------------------------------------------------------------







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .