பக்கங்கள்

வியாழன், செப்டம்பர் 05, 2019

பெயர் விளக்கம் (10) ஞானராஜ் - பெயரின் பொருள் தெரியுமா ?

ஞானராஜ் அவர்களே ! உங்கள் பெயருக்கு என்ன பொருள் என்று சொல்ல முடியுமா ?


ஞானம் என்ற சொல்லுக்கு அறிவு, கல்வி, தெளிவு, நல்லொழுக்கம் என்று பல பொருள்கள் உள்ளன ! இச்சொல் வடமொழிச் சொல் என்று பலரும் கருதுகிறார்கள். இது தவறு ! ஞானம் தமிழ்ச் சொல்லே ! தமிழர்களின் தாராள மனம் காரணமாக வேறு பல வடமொழிப் பெயர்களுக்கு இடம் தந்துவிட்டோம். தமிழில் பெயர் வைப்பது தமிழர்களுக்குத் தாழ்வாகத் தோன்றுகிறது போலும் !

ஞானம் என்ற பெயருடன் முன்னொட்டு, பின்னொட்டாக சில சொற்களைச் சேர்த்து மாந்தப் பெயர்கள் பல வழக்கில் உள்ளன. அவற்றுள் ஒருசில தரப்பட்டுள்ளன. அப்பெயர்களுக்கு இணையான அழகிய தமிழ்ப் பெயர்கள் தரப்பட்டுள்ளன.  தமிழ் ஆர்வலர்கள் தங்கள் குழந்தைகளுக்கும், தங்கள் பெயரன் பெயர்த்திகளுக்கும் இனிய தமிழ்ப் பெயர்களைத் தேர்வு செய்து சூட்டுவார்களாக !

-------------------------------------------------------------------------------------------------------

ஞானம் (ஞானம் = கல்வி)............................= கல்விக்கரசு
ஞானராஜ் (ஞானம் = அறிவு).......................= அறிவுக்கரசு
ஞானசுந்தரம் (சுந்தரம்=அழகு)...................= அறிவழகன்
ஞானப்பிரகாசம் (பிரகாசம்=ஒளி).............= அறிவொளி
ஞானமூர்த்தி (மூர்த்தி=தலைவன்).............= அறிவரசு
ஞானவேல் (வேல் = படை).............................= அறிவுவேலன்,
ஞானசௌந்தரி (சௌந்தரம்=அழகு)..........= அறிவழகி
ஞானகிருஷ்ணன் (கிருஷ்ணன்=திருமால்)................= அறிவுமாலன்
ஞானச்செல்வி (ஞானம்=அறிவு)...................= அறிவுச்செல்வி.
ஞானச்செல்வன் (ஞானம்=அறிவு)...............= அறிவுடைநம்பி
கலைஞானம் (கலை=பிறை, மதி)...............= அறிவுமதி.
திருஞானம் (திரு = அழகு)...............................= அறிவழகன்
சிவஞானம் (சிவம்= இன்பம்).........................= அறிவின்பன்

----------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
{15-12-2018}
----------------------------------------------------------------------------------------------------
      
  ”தமிழ்ப் பணி மன்றம்”  முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !
---------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .