பக்கங்கள்

ஞாயிறு, செப்டம்பர் 01, 2019

ஔவையார் பாடல் (02) ஒரு காலடி நாலிலைப் பந்தலடி !

'ஒரு காலடிநாலிலைப் பந்தலடி' !

கம்பர் ஒருமுறை ஔவையாரிடம் ஒரு விடுகதை சொல்கிறேன். புதிரை விடுவியுங்கள் பார்க்கலாம் என்று கூறி 'ஆரை' என்னும் கீரையைக் குறிப்பதாகப் பொருளை உள்ளடக்கி கீழ்க் கண்டவாறு சொன்னார்:-

------------------------------------------------------------------------------------------------------------
பாடல்
------------------------------------------------------------------------------------------------------------

'ஒரு காலடி, நாலிலைப் பந்தலடி'
ஒரு கால் அடி நாலிலைப் பந்தல் அடி

------------------------------------------------------------------------------------------------------------

இதை இவ்வாறு பிரித்து அமைத்துப் பொருள் காண்க !
அடி ஒரு கால்; அடி நாலிலைப் பந்தல்.
(பந்தல்) அடி(யில்)  ஒரு கால்; அடி(போன்ற) நாலிலைகள் உடைய பந்தல்

------------------------------------------------------------------------------------------------------------

தாங்கி நிற்கும் வகையில் அடியில் (கீழே)  ஒரு கால் (தூண்) இருக்கும் ! மேலே கால் அடியைப் போல வடிவம் கொண்ட நான்கு இலைகள் உடைய பந்தல் இருக்கும் (அது என்ன ?)

-------------------------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்;-

ஒரு காலடி = ஒரு கால் இருக்குமடி; நாலிலை = நான்கு இலைகள் உடைய ; பந்தலடி = பந்தல் போன்று இருக்குமடி! (அது என்ன?)
தில் வரும் 'அடி' என்னும் சொல் ஔவையாரை மதிப்புக் குறைவாக விளிக்கும் வகையில் இடக்கராக வைத்துப் புதிரைக் கூறினார்.
ஔவையாரிடமா கம்பரின் இடக்கு செல்லுபடியாகும்? ஔவையார் உடனே பாடினார்:-

------------------------------------------------------------------------------------------------------------
பாடல்

------------------------------------------------------------------------------------------------------------

எட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே,
மட்டில் பெரியம்மை வாகனமே, - முட்டமேல்
கூரையில்லா வீடே, குலராமன் தூதுவனே,
ஆரையடா சொன்னாயடா!

-----------------------------------------------------------------------------------------------------------

பொருள்:- (01)

அடேய் ! அவலட்சணம் பிடித்தவனே ! எருமைக் கடாவே ! கழுதையே !; குட்டி சுவரே !; குரங்கே !; நீ சொன்னது ஆரைக் கீரையைத் தானடா !

-----------------------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:-

எட்டு = '' : கால் = '' ; எட்டேகால் லட்சணம் – அவலட்சணம்; எமன் ஏறும் பரி = எருமைக்கடா; மட்டில் பெரியம்மை - மூத்ததேவி என்னும் மூதேவி;  வாகனம் – கழுதை;  மேல் கூரையில்லா வீடு – குட்டிச்சுவர்; குலராமன் தூதுவன் – குரங்கு

------------------------------------------------------------------------------------------------------------

பொருள் :-(02)

விரைந்து நடக்கும் காலழகா ! எம் குலத்தவனே ! வளரும் செல்வமே ! தேவலோகம் போன்றவனே ! உயர்குல வேந்தன் இராமபிரானின் கதையை காவியமாக்கிய கவிஞனே ! ஆரைக் கீரையை உட் பொருளாக வைத்து நீ விடுகதையைச் சொன்னாய் ! ஆனால் என்னை நீ வெல்ல முடியாது !

-------------------------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:-

எட்டு + கால் = எட்டுக்கால் - எட்டேகால் ; எட்டு = கால்களை எட்டிப் போட்டு நடக்கும், லட்சணமே = அழகனே ! (விரைவாக நடக்கும் வலிமை பொருந்திய கால்களை உடைய அழகனே !) எமன் = எம்முடைவன் (எம் குலத்தவனே !); ஏறும் பரியே = வளரும் செல்வமே !, முட்ட மேல் கூரை இல்லா வீடே = தலையில் முட்டும் அளவுக்குத் தாழ்வான மேற்கூரை இல்லாத ; வீடே (அதாவது தேவலோகம் போன்றவனே !)  குலராமன் = உயர்குலத்தில் பிறந்த வேந்தனான இராமபிரானின்; தூதுவனே = இராமாயணம் என்னும் இராம காதையை இயற்றி, இராமனின் புகழ் பரப்பும் தூதனே ! ஆரை = ஆரைக் கீரையை; அடா = உள்ளடக்கி, சொன்னாய் = என்னிடம் விடுகதையைச் சொன்னாய் ; அடா = அடாது.

------------------------------------------------------------------------------------------------------------
       
 ”தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற கட்டுரை.

------------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[ தி.: 2050, சுறவம்,4.]
(18-01-2019}
------------------------------------------------------------------------------------------------------------

ஒரு காலிலை நாலிலை

5 கருத்துகள்:

  1. மட்டில் பெரியம்மை வாகனமே இதற்கு பொருள் சொல்லவில்லையே

    பதிலளிநீக்கு
  2. இரண்டு தேவியருள் மூத்தவர் மூதேவி; இளையவர் சீதேவி. மூதேவியின் வாகனம் கழுதை. பெரியம்மை வாகனமே என்றால் கம்பரை நோக்கிக் ”கழுதையே” என்று ஔவையார் விளிப்பதாகப் பொருள் !

    பதிலளிநீக்கு
  3. நீங்கள் 2வது பொருள் வைத்து "பெரியம்மை வாகனமே" என்ற தொடரை விளக்க வில்லை என்று கூறியுள்ளார் முதற் கருத்தைத் தெரிவித்தவர். 2வது பொருளில் வசவு இல்லை. ஆயின் பெரியம்மை வாகனம் என்பது வசை இல்லாத சொல் அல்லவே.

    பதிலளிநீக்கு
  4. பெரியம்மை என்பது காளி மாதாவைக் குறிப்பதாய் அவர் வாகனமான "சிங்கமே" என்றும் கொள்ளலாமோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Your explanation for "periyammai vAhanam" to refer to the "praise" (2nd meaning given by the author) is likely to refer to the "lion" as an alternative. However, KALi is not considered "older sister" of Lakshmi. Durga, Lakshmi, and Saraswati are considered co-equals. That is my view. Thanks for sharing your point of view.

      நீக்கு

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .