பக்கங்கள்

வெள்ளி, ஆகஸ்ட் 30, 2019

புதிய தமிழ்ச் சொல் (46) மணிவிளக்கு (L.E.D.LAMP)

புதுச்சொல் புனைவோம் !




மணிவிளக்கு - L.E.D LAMP

-------------------------------------------------------------------------------------------

 

ஆங்கிலப் பெயர் வழக்கிலுள்ள ஒரு பொருளின் பெயரைத் தமிழாக்கம் செய்கையில்உருவாக்கப்படும் புதிய சொல்குறுகிய வடிவு உள்ளதாகவும்ஒலி நயம் உடையதாகவும்தமிழ் மரபுக்கு இணக்கமானதாகவும் இருத்தல் சிறப்புடையதாகும் !

 

வினைச்சொல்லின் அடிப்படையில் பெயர்ச் சொல் உருவக்கப்படுவது தவறன்றுஆனால் ஒலி நயமில்லாத ”கரைப்பான்”, “வடிப்பான்”, ”தெளிப்பான்” என்பன போன்ற சொற்களை உருவாக்குவதைத் தவிர்க்க வேண்டும்இவை தமிழுக்கு வளம் சேர்க்கா !

 

வடிவத்தில் குறுகியதாக இருப்பவையே நிலைத்து நிற்கும்ஒரு எடுத்துக் காட்டு காண்போம். “DRILL BIT” என்பதைத் “துளையிடும் கருவி” என்றனர்சிலர் ”துளை தண்டு” என்றனர்.  வேறு சிலர் “துளைப்பான்” என்றனர்இன்னும் சிலர் “துளையுளி” என்றனர். ”துளையிடும் கருவி”, வடிவில் நீண்டது. “துளை தண்டு”, “துளைப்பான்” இரண்டிலும் ஒலிநயம் இல்லை. ”துளையுளி” பொருந்தி வருகிறது !

 

எனினும்இதவிடச் சிறிய வடிவுடைய “குயிலி” என்னும் சொல் இன்னும் பொருத்தமாக இருக்கும். ”குயிலுதல்” என்றால் துளையிடுதல் என்று பொருள்இதற்கு இலக்கிய ஆதாரங்கள் உள்ளன. ”குயிலுதல்” செய்யும் கருவி “குயிலி”. வடிவிலும் சிறியதுஒலிநயமும் உடையதுபொருள் பொதிவும் உள்ளதுஇத்தகைய சொற்களே எழுதவும்அச்சிடவும்உள்ளீடு செய்யவும் எளிதாக இருக்கும்காலவோட்டத்தில் நிலைத்தும் நிற்கும் !

 

எந்தவொரு ஆங்கிலச் சொல்லையும் தமிழாக்கம் செய்கையில் அதன் உட்பொருள் சிதையாமல் தமிழாக்கம் செய்ய முயல வேண்டும்.. அஃது இயலாத நேர்வுகளில்அதன் செயற்பண்பு அல்லது புறத்தோற்றம் அடிப்படையில் புதிய சொல்லைப் படைக்க வேண்டும்அல்லது வேறொரு பொருளில் (ANOTHER MEANING)  வழங்கிவரும் பண்டைத் தமிழ்ச் சொற்களில் பொருத்தமான  ஒன்றைத் தேர்வு செய்து சூட்டவேண்டும் !

 

டயோடு” (DIODE) என்னும் மின்மவியல் பொருள் (ELECTRONIC COMPONENT) நேர்மின்வாய் (ANODE), எதிர்மின்வாய்  (CATHODE) ஆகிய இரு மின் முனைகளை உடையதுசிற்றளவு மின்கடத்திகளான (SEMI-CONDUCTORS) சிலிகான்செருமானியம்அல்லது செலினியம் போன்ற பொருள்களால் உருவாக்கப்படுபவைஇத்தகைய “டயோடுகள்அலை மின்சாரத்தை நேர் மின்சாரமாக மாற்றும் ”அலைதிருத்தியாகவும் (RECTIFIER), மின்னழுத்தக் கலிங்கு ஆகவும் (VOLTAGE REGULATORS),  ஆளியாகவும் (SWITCHES), சைகைப் பண்பு மாற்றியாகவும் (SIGNAL MODULATORS & DEMOULATORS) பல வகைகளில் நமது தேவைக்கேற்பச்  செயலாற்றுகிறது !

 

ஒளியுமிழும் தன்மையுடன் உருவாக்கப்படும் ”டயோடு” தன் வழியாக  மின்னோட்டத்தைச் செலுத்துகையில்  ஒளியை உமிழ்கிறதுஇத்தகைய “டயோடு” LIGHT EMITTING DIODE என்று அழைக்கப்படுகிறது !

 

தொலைக் காட்சிப் பெட்டியில் (TELEVISION), வெந்நீர்ப் பேழையில் (GEYSER), நீர்த் துய்மைப் பேழையில் (WATER PURIFIER – R.O.SYSTEM) மற்றும் இவை போன்ற மின்மவியல் கருவிகளில் ஒளியுமிழ் “டயோடுகள் இருப்பதைப் பார்த்திருப்பீர்கள் !

 

புதிய சொல் குறுகிய வடிவு உடையதாக இருத்தல் இன்றியமையாத் தேவை.  வலிமையுள்ள உயிர்கள் நிலைத்து வாழும் மற்றவை வீழும் என்னும் டார்வின் கோட்பாட்டின் அடிச் சுவட்டில் பார்க்கையில் குறுகிய வடிவமுள்ள சொற்கள் நிலைத்து வாழும் மற்றவை வீழும் என்பதுதெற்றெனத் தெரிகிறது !

 

ஒளிர் முனை விளக்கு” என்று தமிழாக்கம் செய்யலாம்ஆனால் இது நீண்ட  சொல்லாக உள்ளதுஇதைவிட இன்னும் சுருங்கிய வடிவில் இருத்தல் நலம் !

 

டயோடு” என்பதற்கு அதன் பொருள் மாறாமல் குறுகிய வடிவில் புதுச் சொல் படைத்தல் கடினம்எனவேஅதன் தோற்றத்தை வைத்து புதிய சொல் உருவாக்கலாம்மின்மக் கருவிகளில் (ELECTRONIC APPLIANCES)  காணப்படும் ஒளியுமிழ் “டயோடுகள் யாவும் சிறு மணி (BEED) போன்ற தோற்றம் உடையதாக இருக்கின்றனஇந்த அடிப்படையில் L.E.D. LAMP என்பதை “மணி விளக்கு” என்று தமிழாக்கம் செய்யலாம்.

 

ஒரேயொரு “டயோடு” மட்டும் வீட்டிற்கு ஒளி தரும் விளக்காகி விடுவதில்லைபல “டயோடுகள் கொத்தாக இணைந்து தான் விளக்காகிறது.  எனவே இதை ”பன்மணி விளக்கு” என்று தான் சொல்ல வேண்டும்குறுமை வடிவு கருதி “பன்மணியைச் சுருக்கி “மணிவிளக்கு” என்றே அழைக்கலாம் !

 

------------------------------------------------------------------------------------------------

                     L.E.D LAMP.............= மணிவிளக்கு

------------------------------------------------------------------------------------------------

 


-----------------------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்.

[தி.ஆ:2050, ஆடவை (ஆனி) 09]

{24-06-2019}

------------------------------------------------------------------------------------------------------------------------------

 

 


மணிவிளக்கு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .