பக்கங்கள்

செவ்வாய், பிப்ரவரி 09, 2016

புதிய தமிழ்ச் சொல் (34) எண்மம் ( DIGITAL )

புதுச்சொல் புனைதல் !


DIGITAL = எண்மம்

---------------------------------------------------------------------

 

எண் என்ப ஏனை எழுத்து என்ப இவ்விரண்டும் கண் என்ப வாழும் உயிர்க்குஎன்பது வள்ளுவர் வாக்கு. எண் எழுத்து இகழேல்என்பது ஔவையாரின் அருள்மொழி !

 

 

சுழி (Zero) தொடங்கி 1, 2, 3, என்று தொடர்பவை எண்என்பது அனைவருக்கும் தெரியும். இதை ஆங்கிலத்தில் டிஜிட்” (DIGIT) என்று சொல்கிறார்கள். எண்என்பதை இலக்கம்என்றும் தமிழில் சொல்வதுண்டு. !

 

 

கணினியில் நாம் தமிழ்என்று உள்ளீடு செய்து, அதைச் சேமிக்க” (SAVE), கட்டளை தருவதாக வைத்துக் கொள்வோம். கணினியின் நினைவகத்தில் அச்சொல் தமிழ்என்று பதிவு செய்யப்படுவதில்லை. சுழி” (ZERO) மற்றும் ஒன்று” (ONE) ஆகிய இரண்டே எண்களின் (BINARY NUMBERS) நாண்களாகவே (Strings) அது பதிவாகிறது ! [ STRING என்பதற்கு, நாண், மெல்லிய கயிறு, நாடா, முறுக்குநூல், இழை, கோவை என்றெல்லாம் பொருளுண்டு. ]


 

எடுத்துக்காட்டாக, “இசைஎன்ற ஈரெழுத்துச் சொல் கீழ்க் கண்ட நாண் வடிவில் பதிவாகலாம். ”0101011101010 101010000101010”. இப்படித்தான் என்று சொல்லவில்லை; இப்படி இருக்கலாம் என்று சொல்கிறேன் !

 

 

எழுத்துகள் மட்டுமல்ல, ஒலி, ஒளி, இசை, பேச்சு, படம் ஆகியவையும் இப்படித்தான் அந்தந்தக் கருவிகள் வாயிலாகப் பதிவு செய்யப் படுகின்றன !

 

 

இவ்வாறு, எழுத்துப் பதிவு, இசைப் பதிவு, ஒளிப்பதிவு வண்ணப் பதிவு, ஆகிய அனைத்துத் துறைகளிலும் ஆட்சி புரிகின்ற டிஜிடல்என்ற சொல்லின் விளக்கம் தான் என்ன ?

 

 

டிஜிடல்என்பது ஒரு மின்ம நுட்பம் (Electronic Technology). இந்த நுட்பம் வாயிலாக நேர்மம் , அன்னேர்மம் (positive and non-positive) ஆகிய இரு படிமங்களாக (states) தரவுகளை (data) உருவாக்கல், சேமித்தல், அலசி ஆய்தல் ( Processing) ஆகியவை நடைபெறுகின்றன !

 

 

இவற்றுள் நேர்மம்( Positive ). “ 1 ” என்னும் குறியீட்டினாலும் அன்னேர்மம் ( Non-Positive ) . “ 0 ” என்னும் குறியீட்டினாலும் சுட்டப் பெறுகின்றன. ”1” , “0” ஆகிய இரண்டே குறியீடுகள் அடங்கிய நாண்களைக் கொண்டே (Strings) எந்தத் தரவும் உருவாக்கப்படுகிறது; சேமிக்கப்படுகிறது; அலசி ஆயப்படுகிறது !

 

 

[ Digital describes electronic technology that generates, stores, and processes data in terms of two states: positive and non-positive. Positive is expressed or represented by the number 1 and non-positive by the number 0. Thus, data transmitted or stored with digital technology is expressed as a string of 0's and 1's. ]

 

 

டிஜிட்என்பதை எண்அல்லது இலக்கம்என்று தமிழில் சொல்கிறோம். இந்த அடிப்படையில் டிஜிடல்என்பதை சுழி ( 0 ) மற்றும் ஒன்று ( 1 ) ஆகிய எண்கள் இணைந்து உருவாகும் நாண் (String) என்று சொல்லலாம். எண் + நாண் = எண்ணாண் என்று புதிய சொல் தோன்றும் !

 

 

இச்சொல் பலுக்குவதற்கு (உச்சரிப்பதற்கு) இனிமையாக இல்லை. எனவே நாண்என்பதை விட்டுவிட்டு, “எண்’’ என்பதை மட்டும் அடிப்படையாகக் கொண்டு எண்மம்என்னும் சொல்லை உருவாக்கலாம். இச்சொல் டிஜிடல்என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லாக அமையும் !

 

 

எனவே, “டிஜிட்என்பதை எண்என்றும், ”டிஜிடல்என்பதை எண்மம்என்றும் தமிழாக்கம் செய்து புதிய சொற்களை உருவாக்குவோம் !

 

 

எண்மம்என்ற சொல்லின் அடிப்படையில் உருவாகும் பிற சொற்களையும் காண்போமா !

 

 

=============================================================

 

 

DIGIT 

எண்

DIGITAL 

எண்மம்

DIGITALISE 

எண்மமாக்கல்

DIGITAL  RECORDING 

எண்மப் பதிவு

DIGITAL  WATCH 

எண்மக் கடிகை

DIGITAL  LIBRARY

எண்ம நூலகம்

DIGITAL CAMERA 

எண்மப்  பதிகை

DIGITAL  ELECTRONICS

எண்ம மின்மவியல்

DIGITAL  COMPUTER

எண்மக் கணினி

DIGITAL  DATA

எண்மத் தரவுகள்

DIGITAL  MEDIA

எண்ம ஊடகங்கள்

DIGITAL  TELEVISION

எண்மத் தொலைக்காட்சி

DIGITAL  RADIO

எண்ம வானொலி

DIGITAL  MUSIC

எண்ம இசை

DIGITAL  PHOTO

எண்ம விழியம்

DIGITAL  PAINTING

எண்ம ஈர்மை

 

============================================================ 

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்முகநூல்.

{09-12-2016} 

=========================================================

 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .