புதுச்சொல் புனைவோம் !
IRON BOX = அழலி
----------------------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------------------
இஸ்திரிப் பெட்டி என்று சொல்லப்படும் ஆடைகள் தேய்ப்புப் பெட்டியில் இரண்டு வகையுண்டு.. அந்தக் காலத்தில் சலவைத் தொழிலாளிகள் பயன்படுத்திய இஸ்திரிப் பெட்டிகள் பித்தளையால் ஆனவை !
இதில் வெப்பமூட்டுவதற்குக் கரி பயன்படுத்தப் பட்டது. பிற்காலத்தில் மின்விசை பயன்பாட்டுக்கு வந்த பின்பு தயாரிக்கப் பெற்ற இஸ்திரிப் பெட்டிகள் துருப் பிடிக்காத இரும்பினால் செய்யப் பெற்றவையாக இருந்தன !
இஸ்திரிப் பெட்டியின் அடிப்பாகம் கனமான மாழைத் தகட்டினால் ( Metal Bottom) ஆனது. இந்த அடிப்பாகம் நெருப்பினாலோ அல்லது மின் விசையினாலோ வெப்பமூட்டப் படும்போது, அது கணிசமான அளவுக்குச் சூடேறுகிறது !
சுருக்கங்கள் உள்ள துணி சற்று ஈரமாக்கப் பட்டு, அதன் மேல் இஸ்திரிப் பெட்டியை வைத்து முன்னும் பின்னும் இழுத்துத் தேய்க்கும்போது, துணியில் உள்ள சுருக்கங்கள் நீங்கி துணி விறைப்பாகக் காணப் படும் !
எந்த வகை இஸ்திரிப் பெட்டியானாலும், அதைப் பயன்படுத்துவதற்கு வெப்பம் தேவை. வெப்பம் எங்கிருந்து உண்டாகிறது ? வெப்பத்தின் மூலவடிவம் அழல். அழலில் இருந்துதான் உண்ணம் (உஷ்ணம்) பிறக்கிறது !
அழல் என்பதற்கு நெருப்பு, வெப்பம், தீக்கொழுந்து, எரிவு, கொதிப்பு என்றெல்லாம் பொருள் சொல்லப்படுகிறது. அழல் இருக்குமிடத்தில் வெப்பம் இருக்கும். இரண்டும் இரட்டைப் பிறவிகள் !
கரியினாலோ அல்லது மின் விசையினாலோ இஸ்திரிப் பெட்டி வெப்பமூட்டப் படும்போது அதற்கு மூலதாரமாக அங்கு அமைவது அழல். அழலின் பயனால் இயக்கப் படும் பெட்டியை அழலிப் பெட்டி என்று சொல்வது பொருத்தமாக இருக்கும் அல்லவா ?
இனி இஸ்திரியைத் தூக்கிப் பரண் மீது வைத்துவிட்டு அழலியைக் கையில்
எடுப்போம். ”அழலி” என்னும் சொல்லின் அடிப்படையில் உருவாகும் பிற சொற்களையும் பாருங்களேன் !
=============================================================
IRON BOX | = அழலி |
ELECTRIC IRON BOX | = மின்னழலி |
CHARCOAL IRON BOX | = கரியழலி |
STEAM IRON BOX | =ஆவியழலி |
அழலி அருமையான மொழியாக்கம் ! தொடர்க தங்கள் தமிழ்ப் பணி !
பதிலளிநீக்குமகிழ்ச்சி !
பதிலளிநீக்குஅருமையான கலைச்சொல்லாக்கங்கள்... நீங்கள் ஃபேஸ்புக்கில் இருக்கிறீர்களா?
பதிலளிநீக்குhttps://www.facebook.com/groups/tamilsol/
https://www.facebook.com/groups/col.aayvu/
https://www.facebook.com/groups/senthamizh/
-- ஆகிய ஃபேஸ்புக் பக்கங்களில் கலைச்சொற்கள் தொடர்பாக பலர் உரையாடுகின்றனர்.
ஊக்கம் தரும் வகையில் உங்கள் கருத்துரை இருக்கிறது. உங்கள் பெயரைக் குறிப்பிட மறந்து விட்டீர்களே ! முகநூலில் “தமிழ்ப் பணி மன்றம்” என்னும் குழுவின் (group) ஆட்சியராக (admin) இருக்கிறேன். அதில் நீங்களும் சேர்ந்திட அழைக்கிறேன் !
நீக்குஊக்கம் தரும் வகையில் உங்கள் கருத்துரை இருக்கிறது. உங்கள் பெயரைக் குறிப்பிட மறந்து விட்டீர்களே ! முகநூலில் “தமிழ்ப் பணி மன்றம்” என்னும் குழுவின் (group) ஆட்சியராக (admin) இருக்கிறேன். அதில் நீங்களும் சேர்ந்திட அழைக்கிறேன் !
நீக்கு