புதுச்சொல் புனைவோம் !
குயிலி - DRILL BIT
-----------------------------------------------------------------------------------------------------
மரத்தில் துளை இடுவதற்குத் துரப்பணம் என்ற கருவி பயன்படுவது போல் இரும்பில் துளையிட, டிரில் பிட் (Drill Bit) என்ற கருவி பயன் படுகிறது. இந்தக் கருவியைத் தமிழில் எவ்வாறு அழைப்பது ? சிலர் துளையுளி என்கின்றனர். வேறு சிலர் துளையிடும் கருவி என்கின்றனர். இன்னும் சிலர் துளைப்பான் என்கின்றனர் !
புதிதாக ஒரு சொல் உருவாக்கும் போது, அது சுருங்கிய வடிவினதாகவும், பொருள் பொதிந்ததாகவும், ஒலி நயம் உடையதாகவும் அமைந்தால் அச்சொல் நிலைத்து நிற்கும் !
முற்காலத்தில், முத்துக்களை மாலையாகக் கோப்பதற்கு வசதியாக அதில் மெல்லிய துளை வழி ( through hole ) இடுவது வழக்கம். இத்தகைய துளையிடும் பணியைச் செய்தோர் “ குயினர் “ என்று அழைக்கப் பட்டனர். “ குயிலல் “ செய்தவர்கள் “ குயினர் “ ஆயினர். ” குயில் ‘ , “ குயிலல் “ , “ குயிலுதல்” என்ற சொற்கள் எல்லாம் “ துளைத்தல் “என்பதைக் குறிக்கும் சொற்களே !
”கோடுபோழ் கடைநரும், திருமணிக் குயினரும்...” என்பதும் இதே இலக்கியத்தில் இடம் பெற்றுள்ள பாடல் வரி ! (வரி: 511)
” குன்று குயின்றன்ன ஓங்கு நிலை வாயில் “ என்று நெடுநல் வாடை என்னும் இலக்கியமும் பேசுகிறது ! ( வரி: 88)
“ குயில் “ ( துளைத்தல் ) என்னும் வினையப் புரிகின்ற கருவியை “ குயிலி “ என்று கூறுதல் பொருத்தமாக அமையும் அல்லவா ? இனிமேல் டிரில் பிட் (Drill Bit) என்பதை “ குயிலி “ என்றே அழைப்போமே !! சுருங்கிய வடிவம் ; ஒலி நயம் ; பொருள் ஆழம் . வேறு என்ன வேண்டும் ?
”குயிலி” என்னும் சொல்லின் அடிப்படையில் உருவாகும் பிற சொற்களையும் பாருங்களேன் !!!
===========================================================
DRILL BIT.............................. |
= குயிலி |
STRAIGHT SHANK DRILL BIT............................................ |
= செங்காற் குயிலி |
TAPPER SHANK DRILL BIT |
= கணைக்காற் குயிலி |
TWIST DRILL........................ |
= சுழற் பீலிக் குயிலி |
COMBINATION CENTER DRILL...................................... |
= குழிப்புக் குயிலி |
DRILL CHUCK...................... |
= குயிலிச் சிமிழி |
DRILL BRACE...................... |
= குயிலிச் சூரல் |
DRILLING MACHINE.......... |
= குயிற் பொறி |
HAND DRILLING MACHINE |
= கைவலக் குயிற் பொறி |
BENCH DRILLING MACHINE............................... |
= விசிக் குயிற் பொறி |
PILLAR DRILLING MACHINE............................... |
= நிலைக் குயிற் பொறி |
RADIAL DRILLING MACHINE............................... |
= சுழலியல் குயிற் பொறி |
Coined new word is very fine. We need lot of such new words to help improve Tamil to regain its peak. Keep it up.
பதிலளிநீக்குதங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி !
பதிலளிநீக்குகுயிலின் குழைவான குரலைவிட இனிமையாகவும் காரணத்துடனும் அமைந்துள்ளது ”குயிலி”
பதிலளிநீக்குமகிழ்ச்சி !
பதிலளிநீக்கு