பக்கங்கள்

திங்கள், டிசம்பர் 14, 2015

புதிய தமிழ்ச் சொல் (18) உச்சிக்கு முன் / உச்சிக்குப் பின் ( A.M /P.M.)

புதுச்சொல் புனைவோம் !



A.M = உ.மு (உச்சிக்கு முன்)
P.M = உ,பி (உச்சிக்குப் பின்)
----------------------------------------------------------------------------------------------------------

ஒரு நாளுக்குரிய 24 மணி நேரத்தை இரண்டாகப் பகுத்து இருக்கிறார்கள் மேலை நாட்டு அறிஞர்கள் !

ஒவ்வொரு நாட்டிலும் எந்த வேளையில் கதிரவன் முழுப் பேரொளியுடனும், வலிமையான வெப்ப வீச்சுடனும் திகழ்கிறதோ அந்த வேளைக்கு உச்சி வேளை (MERIDIAN) என்று பெயரிட்டு இருக்கிறார்கள் !


எந்த நாட்டிலும் உச்சி வேளை என்பது நண்பகல் 12 00 மணியைத் தான் குறிக்கும். இருபத்து நான்கு மணி நேரம் உடைய ஒரு நாள்பொழுதை உச்சி வேளைக்கு முன்புள்ள பகுதி (Anti Meridian), உச்சி வேளைக்குப் பின்புள்ள பகுதி (Post Meridian) என இரு பகுதிகளாகப் பார்க்கப்படுகிறது !

நள்ளிரவு 12- 00 மணி முடிந்தவுடன்தொடங்கும் உச்சிக்கு முந்திய பொழுது ( A.M ) நண்பகல் 12 – 00 மணி வரை தொடர்கிறது. அது போல் நண்பகல் 12 – 00 மணி முடிந்தவுடன் தொடங்கும் உச்சிக்குப் பிந்தைய பொழுது( P.M ) நள்ளிரவு 12 – 00 மணி வரை தொடர்கிறது !

மேனாட்டார் வகுத்துள்ள இந்த உச்சிக்கு முந்திய பொழுது, உச்சிக்குப் பிந்தைய பொழுது ஆகியவற்றை நாமும் A.M, P.M என்று குறிப்பிட்டுப் பின்பற்றி வருகிறோம் !

A.M, P.M என்பதற்கு முற்பகல், பிற்பகல் என்ற சொற்கள் முழுமையாகப் பொருந்தி வரவில்லை. ஏனெனில் முற்பகல் என்பது ஆறு மணி நேரம் தான். அதுபோல் பிற்பகலும் ஆறு மணி நேரம் தான். ஆனால் A.M என்னும் Anti meridian என்பது 12 மணி நேரமும் P.M. எனப்படும் Post Meridian என்பது 12 மணி நேரமும் உடையவை !

எனவே A.M. என்பதை உ.மு. (உச்சிக்கு முன்) என்றும், P.M. என்பதை உ.பி  ( உச்சிக்குப் பின் ) என்றும் இனி எழுதுவோமே !


=============================================================


A.M. (Anti meridian) = உ.மு. (உச்சிக்கு முன்)
P.M.( Post Meridian) = உ.பி. (உச்சிக்குப் பின்)
8-00 A.M. = 8-00 உ.மு
8-00 P.M. = 8-00 உ.பி
12-00 NOON = 12-00 ந.ப (நண்பகல்)
12-00 MID NIGHT =12.0 ந.இ (நள்ளிரவு)


=============================================================

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்.
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
“தமிழ்ப் பணி மன்றம்” முகநூல்.

==============================================================




5 கருத்துகள்:

  1. முற்பகல், பிற்பகல் என்பனவற்றின் பொருத்தமின்மை பற்றி இத்துணை நாளும் சிந்திக்க வில்லை. மாற்றுச் சொல்லாக உ.மு, உ.பி அறிமுகப்படுத்தப் பெற்றிருப்பது வர்வேற்புக்குரியது !

    பதிலளிநீக்கு
  2. முற்பகல், பிற்பகல் என்பனவற்றின் பொருத்தமின்மை பற்றி இத்துணை நாளும் சிந்திக்க வில்லை. மாற்றுச் சொற்களாக உ.மு, உ.பி என்பவை அறிமுகப்படுத்தப் பெற்றிருப்பது வரவேற்புக்குரியது !

    பதிலளிநீக்கு
  3. நான் இத்துணை நாளும் am pm ற்கு விளக்கம் தெரியாமல் இருந்தேன். இப்போது புரிந்து கொண்டேன். மிக்க நன்றி ஐயா!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வை.வேதரெத்தினம்7 நவ., 2019, 8:56:00 PM

      மிக்க மகிழ்ச்சி ! உங்கள் பெயருடன் தங்கள் கருத்துரைகள் இனி வெளிவந்தால் மகிழ்ச்சி அடைவேன் !

      நீக்கு

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .