உயிரீற்றுச்
சிறப்புப் புணர்ச்சி
“இ”கர ”ஐ”கார ஈற்றுச் சிறப்பு
விதி.
நூற்பா.176. ( இகரம் ஐகாரம் முன் வலி வருதல்)
அல்வழி “இ”, “ஐ”ம் முன்னர் ஆயின்
இயல்பும், மிகலும், விகற்பமும் ஆகும் (நூற்பா.176)
’இ’கர, “ஐ”கார” ஈற்று அஃறிணைப் பெயர் முன் வல்லெழுத்து வந்தால், சில அல்வழி நேர்வுகளில் இயல்பாகும். (நூற்பா.176)(பக்.142)
பருத்தி + குறிது
= பருத்தி குறிது (பக்.143) (நூற்பா.176)
முள்ளங்கி + சிவப்பு = முள்ளங்கி
சிவப்பு
யானை + கரிது
= யானை கரிது.
சேனை + பெரிது
= சேனை பெரிது
(எழுவாய்த்
தொடரில் (அல்வழியில்) வலி
இயல்பாயது)
’இ’கர, “ஐ”கார” ஈற்று அஃறிணைப் பெயர் முன் வல்லெழுத்து வந்தால், உம்மைத் தொகையில் இயல்பாகும். (நூற்பா.176)
பரணி + கார்த்திகை = கார்த்திகை (பக்.143)
யானை + குதிரை
= யானை குதிரை (பக்.143)
(உம்மைத் தொகையில் (அல்வழி) வலி இயல்பாயது) (பக்.143)
’இ’கர, “ஐ”கார” ஈற்று அஃறிணைப் பெயர் முன் வல்லெழுத்து வந்தால், இருபெயரொட்டுப் பண்புத் தொகையில் வல்லெழுத்து மிகும்).(பக்.143). (நூற்பா.176)
மாசி + திங்கள்
= மாசித் திங்கள் (மாசியாகிய
திங்கள்)
சாரை + பாம்பு
= சாரைப்பாம்பு (சாரையாகிய
பாம்பு)
({இருபெயரொட்டுப்} பண்புத்
தொகையில் (அல்வழி) வலி மிகுந்தது)(பக்.143)
’இ’கர, “ஐ”கார” ஈற்று அஃறிணைப் பெயர் முன் வல்லெழுத்து வந்தால்,உவமத் தொகையில் . (நூற்பா.176)
காவி + கண்
= காவிக்கண்
பனை + கை
= பனைக்கை
(உவமத்
தொகையில் (அல்வழி) வலி மிகுந்தது (பக்.143)
’இ’கர, “ஐ”கார”
ஈற்று அஃறிணைப் பெயர் முன் வல்லெழுத்து
வந்தால், சில நேர்வுகளில் எழுவாய்த் தொடரில்
விகற்பிக்கும்.).(பக்.143) ’இ’கர, “ஐ”கார” ஈற்று அஃறிணைப் பெயர் முன் வல்லெழுத்து வந்தால், சில அல்வழி நேர்வுகளில் இயல்பாகும். (நூற்பா.176)
கிளி + குறிது = கிளி குறிது
கிளி + குறிது
= கிளிக் குறிது.
யானை + கரிது
= யானை கரிது
யானை + கரிது
= யானைக்கரிது
எழுவாய்த் தொடரில்
(அல்வழி) வலி
விகற்பித்தது (பக்.143)
உயிரீற்றுச்
சிறப்புப் புணர்ச்சி
(அகர
ஈற்றுச் சிறப்பு விதி)
நூற்பா.168.(வாழி என்பதன் முன் முன் வலி மிகா.
வாழிய என்பதன் ஈற்றின் உயிர்மெய்
ஏகலும் உரித்து அஃது ஏகினும் இயல்பே. (நூற்பா.168)
’வாழிய ‘ என்னும் வியங்கோள் வினைமுற்றின் இறுதியிலுள்ள யகர உயிர்மெய் கெடவும்
கூடும். அப்படிக் கெடுகையில் வருமொழி முதலில் நிற்கும்
வல்லினம் இயல்பாகும் (பக்.137) (நூற்பா.168)
வாழிய+ கொற்றா
= வாழி கொற்றா.
வாழிய+ சாத்தா
= வாழி சாத்தா.
-------------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
[veda70.vv@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம் முகநூல்.
-------------------------------------------------------------------------------------------------------------