பக்கங்கள்

வியாழன், ஜனவரி 23, 2020

தமிழ் (30) ”ச”கரத்தை மறந்த தமிழர்கள் !

தமிழர்களில் ஒரு பகுதியினர் மட்டும் இந்த  “” கரத்திற்கு அடிமையாகிப் போனது ஏன் ? 



தமிழ் நெடுங்கணக்கில் உயிரெழுத்து 12, மெய்யெழுத்து 18, உயிர்மெய்யெழுத்து 216, ஆய்த எழுத்து 1, ஆக மொத்தம் 247 எழுத்துகள் உள்ளன என்பது தமிழ் படித்த அத்துணைப் பேருக்கும் தெரியும். படித்து முடித்தாகிவிட்டது; ஏதோவொரு பணியையும் தேடிக் கொண்டாகிவிட்டது. சிலருக்குத் திருமணமும் ஆகிவிட்டது !

இத்துணைக் காலத்திற்குப் பிறகு, ஒரு சிலருக்கு, தமிழ் நெடுங்கணக்கில் உள்ளகர வரிசை எழுத்துகள் மட்டும் பகையாகிப் போய்விட்டன. எப்படி என்று கேட்கிறீர்களா? சில நண்பர்களை அழைத்து ஆய்வு செய்வோமே ! முதலில் சண்முகம் என்பவரை அழைத்து உங்கள் பெயரை தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதுங்கள் என்று சொல்லுங்கள். அவர் தமிழில் ஷண்முகம்என்றும் ஆங்கிலத்தில் SHANMUGAM என்றும் எழுதி இருப்பார். அவருக்குஎழுத்து மறந்து போய்விட்டதா அல்லது அதன் மீது ஏதாவது வெறுப்பா ?

இன்னொருவரைகுறிப்பாகச் சரவணன் என்பவரை - அழைத்து அவர் பெயரை இரு மொழிகளிலும் எழுதச் சொல்லுங்கள். “SHARAVAVAN” என்று ஆங்கிலத்தில் எழுதுகிறார். அன்பரே, தமிழிலும் எழுதுங்கள்  என்று சொன்னால்,  I AM SORRY என்று சொல்லிவிட்டுஷரவணன்என்று எழுதுகிறார். என்ன நண்பரே ! “சரவணன்என்று தானே எல்லோரும் பெயர் வைத்துக் கொள்கிறார்கள், நீங்கள் மட்டும் ஷரவணன்என்று பெயர் வைத்துக் கொண்டீர்களா ? என்று வினவினால், பெயரியல் கலையின்படி (NAMALOGY)  எழுத்துக்குப் பதில்எழுத்துப் பயன்படுத்தினால் நான் பெரிய ஆளாக வருவேன் என்று  பெயரியல் கலைஞர் (NAMALOGIST) ஒருவர் சொன்னார். என்கிறார் !

தாய்க் குலத்திலிருந்து ஒருவரை அழைத்துசாந்திஎன்று எழுதச் சொல்லுங்கள். அவர் உங்களை ஒரு மாதிரியாகப் பார்த்துவிட்டு “SHANTHI” என்று எழுதுகிறார். தமிழில் எழுதச் சொன்னால்ஷாந்திஎன்று வரைகிறார். என்ன ஆயிற்று இந்த தமிழ்க் குலத்திற்கு ? நாம் வாழ்வது தமிழகம் தானா ? தமிழகத்தில் இன்று தாராளமாகப் புழங்கும் கரப் பெயர்களைப் பாருங்களேன் !

( (01) ஷங்கர்  (02) ஷிவா  (03) ஷிவகுமார்  (04) ஷேகர்  (05) ஷெல்வகுமார். (06) ஷரவணன்  (07) ஷாந்தி  (08) ஷண்முகம் (09) ஷம்பத் குமார் (10) ஷெல்வா (11) ஷெல்வி


தமிழர்களில் ஒரு பகுதியினர் மட்டும் இந்தகரத்திற்கு அடிமையாகிப் போனது ஏன் ? இவர்கள் எல்லாம் தம் சொந்த அறிவை இழந்து வாழும் சிந்தனைச் சிற்பிகள்ஆகிவிட்டார்களோ ?  பித்தலாட்டக் காரர்களின் பேச்சைக் கேட்டுத் தன் பெயரைச் சிதைத்துக் கொண்டபேரறிவாளர்கள்ஆகப் பிறப்பெடுத்து விட்டார்களோ ?

பெயரியல் கலைஞன் (NAMALOGIST) என்று சொல்லிக் கொண்டு தொலைக் காட்சிகளில் கரும்பலகையும் சுண்ணக் காம்புக் (CHALK PIECE) கையுமாக காட்சிகள் நடத்தும் பித்தலாட்டக் காரர்களின் பின்னால் அணிவகுத்துச் செல்ல இவர்கள் எப்படித் துணிந்தார்கள் ? எதையும் பகுத்துப் பார்த்து முடிவு செய்ய வேண்டிய இந்த பளிங்குச் சிலைகள் சாக்கடைக்குள் சரிந்து கிடப்பது ஞாயந்தானா ?

உறவியல் கலைஞர் (FAMILIOLOGIST) என்று சொல்லிக் கொண்டு நாளை இன்னொரு ஏமாற்றுக்காரன் வந்து உன் தந்தையை மாற்றிவிட்டு இன்னொரு ஆளைத் தந்தையாக  ஏற்றுக் கொண்டால், ஒளிமயமான எதிர்காலம் உனக்கு உண்டு என்று சொன்னால், இந்த பேதைகள் பெற்ற தந்தையையே மாற்றி விடுவார்களா ?

கோடி கோடிச் செல்வர்களாக இந்தியாவில் உலா வந்து கொண்டிருக்கும் டாட்டா”, பிர்லா, அம்பானி, அதானி, அகர்வால் எல்லோரும் பெயரியல் கலைஞர்களின் பேச்சைக் கேட்டுப் பெயரை மாற்றிக் கொண்டு வாழ்வில் உயர்வடைந்தவர்கள் தானா ?

பெயரியல் கலைக்கு ஒரு மனிதனின் வாழ்வை மாற்றி அமைக்கும் ஆற்றல் உண்டு என்பது உண்மையானால்,  நாட்டில் நடமாடும் அத்துணைப்  பெயரியல் கலைஞர்களும், தங்கள் பெயரை மாற்றி அமைத்துக் கொண்டுடாட்டா, பிர்லா, அம்பானி, அதானி அகர்வால்ஆகிவிட வேண்டியது தானே ? எதற்காகத் தொலைக் காட்சிகளில் தோன்றி ஏமாறுபவர்கள் இருக்கிறார்களா என்று தூண்டில் போட்டுக் கேவலமான பிழைப்பை நடத்த வேண்டும் ?

ஷரவணன், ஷண்முகம், ஷாந்தி, ஷிவா, ஷேகர் எல்லோரும் சிந்தியுங்கள் ! ஏமாற்றுக்காரர்களின்  தூண்டிலுக்கு நீங்கள் இரையானது போதும். சிதைந்து போன உங்கள் பெயர்களை மீட்டெடுத்து, முன்பு போல்சரவணன், சண்முகம், சாந்தி, சிவா, சேகர்என்று மாற்றிக் கொள்ளுங்கள். அல்லது அழகிய தமிழில் குறிஞ்சி வேந்தன் (சரவணன்), சிலம்புச் செல்வன் (சண்முகம்), பண்பழகி (சாந்தி), சுடர்வண்ணன் (சிவா), முடியரசன்( சேகர்) என்று மாற்றி அமைத்துநான் தமிழன்என்று பறை சாற்றித் தலை நிமிர்ந்து வாழுங்கள் !


----------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்,
[தி.:2051:சுறவம்(தை)08]
{22-01-2020}

-----------------------------------------------------------------------------------------------------------
     
தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற 
 கட்டுரை !

-----------------------------------------------------------------------------------------------------------

பல்வகை (22) பிறரை மதிக்கக் கற்றுக் கொள்வோம் !

அனைவரையும் மதிப்போம் ! அப்பொழுது தான் நாமும் மதிக்கப்படுவோம் !




எதிரில் வருபவர் நமக்கு அறிமுகம் ஆனவராக இருந்தால் அவருக்கு வணக்கம் சொல்கிறோம். அவரும் நமக்கு வணக்கம் சொல்கிறார். இது தான் பண்பாடு. நாம் வணக்கம் சொன்னாலும் சிலர் நமக்கு திரும்ப வணக்கம் சொல்வதில்லை. இத்தகைய பண்பாடற்ற செயல் சிலரிடம் இருக்கத்தான் செய்கிறது !

யார் இத்தகைய பண்பாடில்லாத மனிதர்கள் ? (01) மேட்டுக் குடிமக்கள் எனத் தம்மை கருதிக் கொண்டிருக்கும் தன்முனைப்பு (ஆணவம்) எண்ணம் கொண்டவர்கள் (02) நம்மை விட எல்லா வகையிலும்  தாம் உயர்ந்த நிலையில்  இருப்பதாகக் கருதிக் கொண்டிருக்கும் சில அதிகாரிகள் !

இத்தகைய பண்பாடற்ற மனிதர்களை நாம் திருத்த முடியாது. அவர்களாக உணர்ந்து திருந்தினால் தான் உண்டு. பாவம் ! இந்தபெரியமனிதர்களை விட்டுவிடுவோம் !

முகநூலில் நாம் ஒருகட்டுரை எழுதுகிறோம். அதைப் பலர் படிக்கிறார்கள். படித்துவிட்டு எதுவும் சொல்லாமல் சிலர் கடந்து போய்விடுகிறர்கள். “SEEN BY” என்று காணப்படும் குறிப்பைச் சொடுக்கிப் பார்த்தால், யார் யார் இப்படிக் கடந்து போனவர்கள் என்பதை முகநூல் பட்டியல் இட்டுக் காட்டிவிடுகிறது !

நம்முடைய இடுகைக்கு, தாம்விழைவு” (LIKE) கொடுத்தாலோ, அல்லது பின்னூட்டம் (COMMENTS) இட்டாலோ, தம் தரம் தாழ்ந்து விடும் என்ற மிதப்பு எண்ணம் கொண்ட இத்தகையமாமனிதர்களையும் நாம் திருத்த முடியாது. நம் இடுகையைப் படித்துக் கருத்துச் சொல்வதால்  அவர்களது தரம் தாழ்ந்து போகிறது என்றால், அவர்கள் உயரத்திலேயே இருக்கட்டும் ! அவர்களையும் விட்டு விடுவோம் !

இந்தமாமனிதர்கள் அல்லாமல் வேறு சிலர் நமது இடுகைக்குவிழைவு” (LIKE) தருகிறார்கள்; அல்லதுகருத்துரை” (COMMENTS) சொல்கிறார்கள்; அல்லதுபகிர்வு” (SHARE) மட்டும் செய்கிறார்கள் !

இரண்டொரு சொற்களில் கூட கருத்துரை (பின்னூட்டம்) எழுத நேரமில்லாமல் அல்லது மடிமை (சோம்பல்) கொண்டுவிழைவு” (LIKE) மட்டும் தருபவர்களையும் விட்டுவிடுவோம். அவர்களுக்கு என்ன மிகுதேவையோ (அவசரம்) “கருத்துரை” (COMMENTS) சொல்ல நேரமில்லை !

சிலர்பகிர்வு” (SHARE) மட்டும் செய்கிறார்கள். அவர்கள் கருத்துரை (COMMENTS) எழுதாவிட்டாலும் நம் வாழ்த்துக்குரியவர்கள். அவர்களை மனதிற்குள்ளேயே வாழ்த்துவோம். இவ்விரு வகையினரைத் தவிர்த்து, கருத்துரை (COMMENTS) எழுதுபவர்கள், தம் நேரத்தைச் செலவிட்டு, நம் இடுகையை முழுவதுமாகப் படித்துப் பார்த்து, ஒரு வரியிலோ அல்லது பல வரிகளிலோ தம் கருத்தினை வெளிப்படுத்துகிறார்கள் !

இவ்வாறு கருத்துரை (COMMENTS) எழுதுபவர்கள் நமது நன்றிக்கு உரியவர்கள். இடுகை செய்யும் நாம், நண்பர்களின் பின்னூட்டங்களையும் (கருத்துரையையும்) முழுமையாகப் படிக்க வேண்டும். என்ன சொல்கிறார்கள் என்பதை உள்வாங்கி,  அவர்களுக்கு அன்புடன் மறுமொழி (பதில்) தரவேண்டும் !

நமது மறுமொழி (பதில்), நேர்வுக்குத் தக்கபடி, ஒருவிழைவு” (LIKE) தருவதன் மூலமும் இருக்கலாம்; ஒரு சொல்லிலும் அமையலாம்; ஒரு வரியிலும்  அமையலாம்; பல வரிகளிலும்  அமையலாம். நமக்கு வணக்கம் சொல்பவருக்கு நாம் ஆற்றும் எதிர்வினையாக வணக்கம் சொல்வதுபோன்றது இச்செயல். எந்தவொரு வகையிலும் நமது நன்றியை அவருக்கு உணர்த்தாவிட்டால், அவரை நாம் மதிக்கவில்லை என்பதாக ஆகிவிடும் !

பல பின்னூட்டங்கள் (கருத்துரைகள்) இடுகையாளரின் எதிர்வினையின்றி (NIL RESPONSE) மொட்டை மரமாகக் காட்சி அளிப்பதைக் கண்டு மனம் வருந்தி இந்த இடுகையைச் செய்திருக்கிறேன். இடுகை செய்யும் அனைத்து நண்பர்களும், தம்மை மதித்துக் பின்னூட்டம் (கருத்துரை) இட்டவர்களை மதியுங்கள் எனக் கேட்டுக் கொள்கிறேன் !

அனைவரையும் மதிப்போம் ! அப்பொழுது தான் நாமும் மதிக்கப்படுவோம் !


----------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்,
[தி.:2051:சுறவம்(தை)06]
{20-01-2020}
----------------------------------------------------------------------------------------------------------

     தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
கட்டுரை !

----------------------------------------------------------------------------------------------------------