பக்கங்கள்

ஞாயிறு, ஆகஸ்ட் 18, 2019

புதிய தமிழ்ச் சொல் (42) ஊக்கு ( SAFETY PIN )

புதுச்சொல் புனைவோம் !

 

SAFETY PIN = ஊக்கு

-------------------------------------------------------------------------------------------

 

ஊக்குஎன்பது தமிழ்ச் சொல்லே. 

நாம் ஊக்கு என்று சொல்வதை

  

ஆங்கிலத்தில் SAFETY PIN என்கிறார்கள்.

 “சேப்டிபின்என்பதை காப்பு ஊசி

 

என்று சொல்லி இருந்தால் 

அது மொழி பெயர்ப்பு. 

அப்படிச் சொல்லவில்லையே !

 

உர்என்ற வேர்ச் சொல் கூடற் கருத்துஉடையது. 

 கூடல் என்றால் ஒன்றாய்க்

 

கூடுதல், விலகி இருக்கும் இரு பொருள்களை 

ஒன்றாய் இணைத்தல 

 

பிணைத்தல்,சேர்த்தல், சேர்த்துக் கட்டுதல் போன்ற பொருள்களை

 உணர்த்தும் !

  

உர் > ஊர் = மக்கள் கூடி வாழுமிடம். (கூடல் கருத்து )

 

உர் > ஊர் > ஊரி = முகில். மேகங்களின் திரட்சி. (கூடல் கருத்து)

 

உர் > ஊரு > ஊருணி = ஊற்று நீர் சேருமிடம் (கூடல் கருத்து)

 

உர் > ஊர் > ஊகி = ஆராய்வு (கருத்துகள் திரள்வு) (கூடல் கருத்து )

 

உர் > ஊர் > ஊகி > ஊக்கி = மிகுதிப்படல் (திரளுதல்) (கூடல் கருத்து )

 

உர் > ஊர் > ஊகி > ஊக்கி > ஊக்கு = ஒன்று சேர்க்கும் கருவி, பிணிக்கும் கருவி

 

(கூடல் கருத்து )

 

இரு துணிப் பகுதிகளை ஒன்றாய்ச் சேர்க்கும் அல்லது பிணிக்கும் கருவியாகத்

 

தானே ஊக்கு செயல்படுகிறது ! ஊக்கு என்பது தமிழ்ச் சொல்லே ! ஹூக்” 

 

என்ற ஆங்கிலச் சொல் ஊக்குஎன்று மொழியாக்கம் செய்யப்பட்டு 

 

இருக்குமோ என்ற ஐயம் வேண்டியதில்லை !

 

தமிழில் ஊசி என்ற சொல் பலவுள. 

 தையல் ஊசி, குண்டூசி

வார்த்தாரை ஊசிகொண்டை ஊசி, கோணி ஊசி 

 என ஊசிகள் பலவுள. 

 

 STAPLE  PIN என்பது  வடிவம் உள்ள பிணையூசி. 

 எனவே இதைப் பகரவூசிஎன்று 

 சொல்லாக்கம் செய்யலாம்.

 

 “பகரவூசியைக் குத்தித் 

தாள்களைப் பிணைக்கும்

 STAPLER  கருவியை “பகரப் பிணிகை” 

என்று கூறலாம் !

 

====================================================

 

 

SAFETY PIN...............................= ஊக்கு

STAPLER.....................................= பகரப்பிணிகை

STAPLER PIN.............................= பகர ஊசி

 

=======================================================

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்முகநூல்.

{18-08-2019} 

=====================================================

 


ஊக்கு