பக்கங்கள்

வியாழன், ஜனவரி 07, 2016

புதிய தமிழ்ச் சொல் (33) அல்-விளை (Wi - Fi )

புதுச்சொல் புனைவோம் !



WI - FI = அல்விளை

-----------------------------------------------------------------------------------------------

 

வைபை என்பது அல்லிழை வலை நுட்பம் ”(WIRELESS NETWORKING TECHNOLOGY) ஆகும்.

 

அல்லிழை என்றால் என்னவென்ற ஐயம் உங்களுக்கு தோன்றலாம். அல் + இழை = அல்லிழை. இழை இல்லாதஎன்று பொருள்.இழை என்பது கம்பியைக் குறிக்கும் சொல். பருமனாக இருந்தால் கம்பிஎன்போம். மெல்லிதாக இருந்தால் இழைஎன்று சொல்வதே பொருத்தம்.

 

இவ்விடத்தில் அல்லிழைஎன்ற சொல்லை அல் வழிப் புணர்ச்சி”, “அன்மொழித் தொகை”, “அல்லுழி”, “அல்வழக்குஆகிய சொற்களுடன் ஒப்புநோக்கிப் பார்த்திடுக !


அல் = வறுமை = வெறுமை = ஒன்றுமின்மை. அல்என்னும் சொல்லுக்கு அல்லாதஎன்ற பொருளுடன் ஒன்றும் இல்லாத”, சுருக்கமாக இல்லாதஎன்ற பொருளும் உண்டு என்பதை உன்னித்துணர்க !

 

இந்த வை-பை நுட்பம் வானலையைப் (RADIO FREQUENCY) பயன்படுத்தி மிகு விரை இணைய தளம் (HIGH SPEED INTERNET) மற்றும் வலைத் தள (HIGH SPEED NETWORK) வசதிகளை அளிக்கிறது.

 

( Wi-Fi is the name of a popular wireless networking technology that uses radio waves to provide wireless high-speed internet and network connections.)

 

வை பை அல்லயன்ஸ் என்ற நிறுவனம் வை-பைஎன்ற சொல்லைத் தனது வணிகக் குறியீட்டுச் சொல்லாக வைத்திருக்கிறது.

 

(The Wi-Fi Alliance, owns the Wi-Fi registered trade mark) 

 

இந்த வணிகக் குறியீட்டுச் சொல்லிலிருந்து உருவான பெயர்தான் வை-பைஎன்பது.வைபை அல்லயன்சு நிறுவனம் வைபைஎன்பதை அல்லிழைச் சிற்றிட வலைத் தள விளைவுகள்” (WIRELESS LOCAL AREA NETWORK PRODUCTS ) என்று வரையறை செய்கிறது. சிற்றிடம் = குறுந்தொலைவு = LOCAL AREA

 

The Wi-Fi Alliance, the organisation that owns the Wi-Fi registered Trade Mark term specifically defines Wi-Fi as “wireless local area network (WLAN) products “ )

 

நாம் இதைச் சுருக்கமாக அல்லிழை விளைவு” (WIRELESS PRODUCTS) என்று அழைக்கலாம். இதையே இன்னும் சுருக்கி அல்விளைஎன்று சொல்லலாம். வை-பைஎன்பதை இனி அல்விளைஎன்று அழைப்போமே !

 

சென்னப்ப நாயக்கர் பட்டினம் சென்னைஆனதைப் போல, ”திருச்சிஎன்ற பெயர் திருச்சிராப்பள்ளியிலிருந்து உருவானதைப் போல அல்லிழைச் சிற்றிட வலைத் தள விளைவுகள்என்பது அல்லிழை விளைவுஎன்று சுருங்கி, “அல்விளைஎன்று நிலை பெறட்டும் !

 

வை-பைஎன்ற புதிர்ச் சொல்லுக்கு அல்விளைஎன்ற புதுப் பெயரைச் சூட்டுவோம்! தமிழுக்கு அணி சேர்ப்போம் ! வாரீர் !!

 

 

=============================================================




Wi - Fi 




=
அல்விளை

Wi - Fi Router

= அல்விளை அளியம்

Wi - Fi Hot Spot

= அல்விளை முனையம்

Wi - Fi Connection

= அல்விளை இணைப்பு

Wi - Fi Soft ware 

= அல்விளை மென்பொருள்

Wireless

= அல்லிழை

 

 

 

========================================================

 

பின்குறிப்பு: சிங்கப்பூர் (சிங்கை) தமிழறிஞர்கள்  பல புதிய சொற்களை உருவாக்கித் தமிழுக்கு அளித்துள்ளனர். அவற்றுள் ஒன்று Wi-Fi = அருகலை. கம்பி இணைப்பு இல்லாமல் சிறு தொலைவுக்கு  செல்கின்ற வானலை ((RADIO FREQUENCY) என்னும் பொருளில் அருகு + அலை = அருகலை என்று உருவாக்கி உள்ளனர். அதை நாமும் ஏற்றுப் பயன்படுத்துவோம்.

 

==============================================================

 

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்முகநூல்.

{01-01-2016}

 

===========================================================


அல்விளையின் குறியீடு




அல்விளை அளியம்