பக்கங்கள்

புதன், டிசம்பர் 16, 2015

புதிய தமிழ்ச் சொல் (26) பேடுருளி ( MOPED)

புதுச்சொல் புனைவோம் !


பேடுருளி = Moped

----------------------------------------------------------------------------------------------

 

முற்காலத்தில் ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்குச் செல்ல, மாட்டு வண்டியை நம் முன்னோர்கள் பயன்படுத்தினர், பின்பு சைக்கிள்பயன்பாட்டுக்கு வந்தது. இதே காலகட்டத்தில் மோட்டார் சைக்கிளும்அறிமுகம் ஆயிற்று. ஆனால் இதன் விலை, வசதி படைத்தோர் மட்டுமே வாங்கக் கூடிய அளவுக்கு மிகுதியாக இருந்தது. 

 

எனவே, எல்லா மக்களும் வாங்கக்கூடிய விலையில் ஒரு வண்டியை அறிமுகப்படுத்த வேண்டிய தேவை எழுந்தது. 

 

இதனால் ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கு முன்பு சுவேகாஎன்னும் மொபெட்அறிமுகம் ஆயிற்று. 


 

இன்றைய நிலையில் மோட்டார் சைக்கிள்ஸ்கூட்டர்”, “மொபெட்”, “”ஸ்கூட்டிஎன்று பல வகையான வண்டிகள் சாலையில் ஓடுவதைப் பார்க்கிறோம்.

 

சாலையில் மிகுதியாக ஓடக்கூடிய மொபெட்வண்டியைத் தமிழில் எவ்வாறு அழைப்பது

 

இதற்குப் பொருத்தமான சொல் இன்னும் அறிமுகம் ஆகவில்லை.

 

MOTORISED PEDALING VEHICLEஎன்பதன் சுருக்கமே “MOPED” ஆகும். இந்த வண்டி மோட்டார்விசையிலும் ஓடும். தேவைப்பட்டால், “பெடலிங்செய்தும் ஓட்டலாம். 

 

இதில் மோட்டார்” “பெடல்இரண்டும் இருப்பதால், இதை மோட்டார் சைக்கிள்வகையிலும் சேர்க்க முடியாது. சைக்கிள்வகையிலும் சேர்க்க முடியாது.

 

"திருநங்கை இனத்தை ஆண்என்றோ பெண்என்றோ குறிப்பிடுவது இல்லை. இரண்டு இனங்களின் சாயலும் இருப்பதால் இவர்களை அலிஎன்று முன்பு சொல்லி வந்தோம். 

 

பிற்காலத்தில், அவர்களும் மனிதர்களே, அவர்களைக் கவுரவமாக நடத்த வேண்டும் என்ற உயர்வான எண்ணத்தில் அரவாணிஅல்லது திருநங்கைஎன்னும் பெயர்களால் குறிப்பிட்டு வருகிறோம்.

 

மொபெட்வண்டியும் இவர்களைப் போன்றதே. மோட்டார்விசையில் ஓடும் மோட்டார் சைக்கிள்சாயலும் இதில் உண்டு. பெடல்செய்து ஓட்டுவதால் சைக்கிள்சாயலும் இதில் உண்டு. 

 

இவ்வாறு இரண்டு இனங்களின் சாயலுள்ள உயிரினங்களுக்கு 

 

பேடுஎன்று தமிழில் பெயர். 

 

சக்கரம் என்றால் உருளிஎன்று பொருள். பேடுஅமைப்பு உடைய சக்கரங்கள்இணைத்த வண்டியை பேடு + உருளி = பேடுருளிஎன்னும் பெயரால் இனி அழைப்போமே !

 

மொபெட் என்னும் சொல்லை முற்றாகத் துறப்போம். இனி பேடுருளிநம் எழுத்திலும், நாவிலும் இன்னிசை கூட்டி நடனமாடட்டும் !

 

====================================================


MOPED

= பேடுருளி

MOTOR CYCLE

= உந்துருளி

SCOOTER

= துள்ளுருளி

SCOOTY

= பாவையுருளி

 

====================================================


ஸ்கூட்டர்
சக்கரம் மிகச் சிறியதாக இருப்பதால், ஓட்டுகையில் துள்ளல்அதிகம் இருக்கும். எனவே இது துள்ளுருளி”. “ஸ்கூட்டிபாவையர் எளிதாக ஓட்டிச் செல்ல வசதியாக வடிவமைக்கப் பட்டிருப்பதால், இது பாவையுருளி

 

==============================================================

 

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்முகநூல்

{16-12-2015}

==============================================================

 






புதிய தமிழ்ச் சொல் (25) கம்மியர் ( MECHANIC )

புதுச்சொல் புனைவோம் !

MECHANIC = கம்மியர்

-------------------------------------------------------------------------------------------------

இயங்கும் உடைமைகள் பழுதுபட்டால் அவற்றைச் சீர்திருத்தித் தருபவர்களிடம் கொண்டு செல்கிறோம். சீர்திருத்தித் தருபவர்களை மெக்கானிக்” (MECHANIC) என்று பெயரிட்டு அழைக்கிறோம்.

 

யார் இந்த மெக்கானிக்” ? பழுது நீக்கித் தரும் அளவுக்குத் தொழில் நுட்ப அறிவுபெற்றவர்.

 

முற்காலத்தில் தொழில் நுட்ப அறிவுத்திறன் பெற்றவர் எல்லோருமே ‘”கம்மியர்என்று தான் அழைக்கப்பட்டனர்.


 

இக்காலத்தில் தொழில் நுட்ப அறிவுத் திறன்பெற்றவர்கள் மட்டும் அல்லாமல், அதைப் பயன்படுத்திப் பழுது நீக்கித் தரும் தொழில் செய்பவர்களும் மெக்கானிக்என்று தான் சான்றோர்களால் அழைக்கப்படுகிறார்கள்.

 

ஆனால் மேலோட்டமாகப் பார்க்கும் போது பழுது நீக்கித் தருபவர்மட்டுமே, பெரும்பான்மை மக்களால் மெக்கானிக்என அறியப்படுகிறார்.

 

கை வல் கம்மியன் கவின் பெறப் புனைந்த....என்பது நெடுநல் வாடை பாடல் வரிகளின் ஒரு பகுதி (வரி;57).

 

சிறியரும் பெரியரும் கம்மியர்குழீஇ.....என்பது மதுரைக் காஞ்சி என்னும் பழந்தமிழ் இலக்கியம் உரைக்கும் காட்சி.

 

கம்மியம்தெரிந்த வகுப்பினர் என்ற பொருளில் பிற்காலத்தில் ஒரு பிரிவு மக்கள் கம்மாளர்என்று அழைக்கப்பட்டனர்.

 

இஃது எப்படி ஆயினும், முற்காலத்தில் தொழில் நுட்ப அறிவுத் திறன்பெற்றிருந்த மக்களைக் குறிக்கும் பொதுச் சொல்லாக இருந்த கம்மியர்என்பதை, மீண்டும்உயிர்ப்பித்து நடைமுறைக்குக் கொண்டு வரலாமே !

 

சில அரசுத் துறைகளில் கம்மியர்என்ற சொல் புழக்கத்திற்கு வந்திருப்பதையும் கருத்திற் கொண்டு கம்மியர்என்ற சொல்லை மெக்கானிக்என்பதற்கு இணையான சொல்லாக ஏற்போம் !

 

கம்மியர்என்ற சொல்லின் அடிப்படையில் உருவாகும் பிற சொற்களையும் பார்ப்போம் !

 

 

========================================================

MECHANIC....................................=
கம்மியர்
MOTOR MECHANIC....................=
இயக்கூர்திக் கம்மியர்
INSTRUMENT MECHANIC........=
கருவிக் கம்மியர்
RADIO MECHANIC.....................=
வானொலிக் கம்மியர்
T.V. MECHANIC...........................=
தொலைக் காட்சிக் கம்மியர்
DIESEL MECHANIC....................=
தீசல் கம்மியர்
MECHANISM................................=
கம்மியம்
MECHANICAL ENGINEERING=
பொறியியல் கம்மியம்

 

========================================================

”DIESEL என்பது அறிவியலாளரின் பெயர். டீசல் எஞ்சினைக் கண்டுபிடித்தவர். எனவே அவர் பெயர் தீசல்என தமிழ்ப் பண்புகளுக்கு ஏற்பச் சற்று மாற்றப்பட்டுள்ளது.

========================================================

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்முகநூல்.

 

=========================================================

 


=============================================================