name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: புதிய தமிழ்ச் சொல் (37) உருளி ( CYCLE )

ஞாயிறு, மார்ச் 06, 2016

புதிய தமிழ்ச் சொல் (37) உருளி ( CYCLE )

புதுச்சொல்புனைவோம் !



உருளி = CYCLE
------------------------------------------------------------------------------------------


மேலை நாட்டினரால் கண்டுபிடிக்கப் பெற்ற சைக்கிள்வண்டிக்கு இரண்டு சக்கரங்கள் உடைய வண்டி என்ற கருத்தில் பை-சைக்கிள்என்று பெயரிடப்பட்டது. காலப் போக்கில் பை-சைக்கிள்மறைந்து சைக்கிள்என்ற சொல் நிலைபெற்று விட்டது !

பை-சைக்கிள்என்பதை தமிழில் மொழிபெயர்த்த வடமொழி ஆர்வலர்கள் அதை துவிச்சக்கர வண்டிஎன்றனர். பின்னாளில் அது இரு சக்கர வண்டிஆயிற்று. வேறு சில தமிழறிஞர்கள் அதை மிதி வண்டிஎன்று அழைக்கலாயினர் !


தனித்தமிழில் ஈடுபாடு கொண்ட அறிஞர்கள் அதை ஈருருளிஎன்று மொழியாக்கம் செய்தனர். இரு + உருளி = ஈருருளி என்றாகும். ஈருருளி என்றால் இரண்டு உருளிகள் (சக்கரங்கள்) உடைய வண்டி என்று பொருள் !


பை-சைக்கிள்என்ற சொல் சுருங்கி சைக்கிள்ஆகிவிட்டது. பேச்சு வழக்கிலும், எழுத்து வழக்கிலும் சைக்கிள்என்ற சொல்லே நிலை பெற்றுவிட்டது. எனவே நாமும் ஈருருளியைக் கைவிட்டு உருளிஎன்றே உரைப்போமே !


சரி ! உருளிஎன்ற சொல் பொருத்தம்தானா ? ஆம் எனில் எப்படி ? “உல்என்னும் வேர்ச்சொல் வளைதல்கருத்தை உணர்த்தும். உல் என்னும் வேரினின்று கிளைத்து, நீண்டு, திரிபடைந்து பல்வேறு சொற்கள் தமிழில் புழங்கி வருகின்றன. அவற்றுள் ஒன்று தான் உருளி”. எப்படி ? உல் > உர் > உருள் > உருளி = (வளைதற் கருத்தை உணர்த்தும்) வட்ட வடிவமான ஆழி, அதாவது சக்கரம் என்று பொருள் !


சைக்கிள்என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு மிகச் சரியான மொழியாக்கம் உருளிஎன்பதே ! ஆகையால் சைக்கிள்என்பதை இனி உருளிஎன்றே சொல்வோம். உருளியின் உறுப்புகள் பெயரெல்லாம் ஆங்கிலத்தில் இருக்கிறதே ! அவற்றையும் தமிழில் மொழியாக்கம் செய்ய வேண்டாமா ? செய்திருக்கிறோம் ! பாருங்களேன் !!

 

=================================================

CYCLE

உருளி

CYCLE - FRAME

பழுவம் (பழு > பழுவம்)

CYCLE - FORK

கவைக்கால்

CYCLE - WHEEL

ஆழி

CYCLE - RIM

வட்டகை

CYCLE - WHEEL SPOKE

ஆரை (ஆரக்கம்பி)

CYCLE - WHEEL HUB

குடம் (ஒ.நோ: வண்டிக்குடம்)

CYCLE - HUB PLATE

குடமூடி

CYCLE- - WHEEL AXLE

இருசு

CYCLE - AXLE CONE

குவிசுரை

CYCLE - TYRE

தூம்புறை (தூம்பு + உறை)

CYCLE - CHAIN

சங்கிலி

CYCLE-  PEDAL

மிதியடி

CYCLE - CRANK WHEEL

ஏராழி (ஏர் + ஆழி)

CYCLE - CRANK SHAFT

ஏர்க்கால் (ஏர்=எழுதல்)

CYCLE - FREEWHEEL

முள்ளாழி

CYCLE - CARRIER

சுமைதாங்கி

CYCLE - MUD-GUARD

மட்காப்பு

CYCLE - DANGER LIGHT

சிவலை விளக்கு

CYCLE - REFLECTOR

சொலிப்பு வில்லை

CYCLE - STAND

உருளித் தளி

CYCLE - BRAKE

தடையம்

CYCLE - BRAKE SHOE

தடையக் கட்டை

CYCLE - BALLS

பரல்கள்

CYCLE – BELL

மணி

CYCLE - SADDLE

இருக்கை

CYCLE- DYNAMO

ஈமின்கூடு

CYCLE - DOOM

குடவிளக்கு

CYCLE PARKING STAND

உருளி நிறுத்தகம்

CYCLE REPAIR SHOP

உருளிச் சீரகம்

CYCLE - OVERHAULING

முற்றாய்வு.

 

==================================================== 

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்முகநூல்.

{06-03-2016}

=====================================================



உருளி

2 கருத்துகள்:

  1. ஐயா அனைத்து சொற்களும் கனகச்சிதமாக அமைத்துள்ளன. உருளி என்பதற்கு ஈடாக இன்னொரு சொல்லை பரிந்துரைத்தால் மிகவும் சிறப்பாக இருக்கும்.

    மற்றபடி தங்கள் பரிந்துரைகள் அனைத்தும் நிறைவே.


    தங்களின் வலைப்பூ தொடுப்பை என்னுடைய வலைப்பூவில் முன்பக்கத்தில் வைக்க ஆசைப்படுகிறேன்.

    நன்றி

    பதிலளிநீக்கு
  2. எனது வலைப் பூ தொடுப்பை தங்கள் வலைப் பூவில் முன்பக்கத்தில் வைத்திட இசைவளிக்கப்படுகிறது.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .