புதன், மார்ச் 16, 2016

அல்லியம் = TRACTOR

புதுச்சொல் புனைவோம் !
= = = = = = = = = = = =
அல்லியம் = TRACTOR
= = = = = = = = = = = =

தமிழில் “உல்” என்னும் வேர்ச்சொல் “வளைதல்” என்னும் கருத்தை “உணர்த்தக் கூடியது. ”உல்” என்னும் வேர்ச் சொல்லில் இருந்து ”வளைவு” என்னும் பண்பை உள்ளடக்கிய “உலகு”, “உலக்கை”, “உலா”, “உழல்” “உருள்”, “உருண்டை” போன்ற பல சொற்கள் உருவாகிப் புழக்கத்தில் உள்ளன. 

“உல்” என்னும் வேர்ச்சொல் “அல்” என்று திரிந்து அதே வளைதற் கருத்தை உணர்த்தும் சொற்களை உருவாக்குகிறது. உல் > அல் > அல்லி = பகலில் மலர்ந்து இரவில் குவியும் (கூம்பும்) மலர். மலர்தலும் குவிதலும் இதழ்களின் “வளைந்து இயங்கும்” பண்பை உணர்த்துவன !

உல் > அல் > அல்லி > அல்லியம் = உழக்கூடியது என்று பொருள். உழுதல் என்பது மண்ணைக் கீழ் மேலாகப் புரட்டி விடுவது தானே. கீழ் மேலாக மண் புரட்டப்படுவதில் வளைதற் கருத்து உள்ளடங்கி இருப்பதைக் காணலாம். இக்காலத்தில் விளை நிலங்களை உழுவதற்குப் பயன்படுத்தப் பெறும் ஒரு எந்திர ஊர்தி தான் ”டிராக்டர்” (TRACTOR) என்பது. வேறு நோக்கங்களுக்கு இதைப் பயன்படுத்தினாலும் இதனுடைய முதன்மைப் பயன் ”நிலத்தை உழுதல்” என்பதே ! 

“டிராக்டர்” என்னும் ஆங்கிலச் சொல்லை “இழுவையூர்தி”, “”உழுவையூர்தி” ”இயந்திரக் கலப்பை” என்றெல்லாம் தமிழாக்கம் செய்திருக்கின்றனர். இச்சொற்களையெல்லாம் விட “அல்லியம்” என்பது சுருங்கிய வடிவும் ஒலிநயமும், பொருள் நயமும் உடைய சொல்லாக விளங்குவதால் ”டிராக்டர்” (TRACTOR) என்பதை நாம் “அல்லியம்” என்றே அழைப்போமே !
= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =

TRACTOR..............................= அல்லியம்

TRACTOR WORKSHOP......= அல்லியச் சீரகம்

TRACTOR MECHANIC........= அல்லியக் கம்மியர்

TRACTOR DEALER.............= அல்லிய வணிகர்

TRACTOR MECHANISM.....= அல்லியக் கம்மியம்

TRACTOR MECHANIC
TRADE..................................=...அல்லியக் கம்மியப் பயிற்சி

TRACTOR TYRE................= அல்லிய ஆழியுறை

POWER TILLER.................= ஏரூர்தி


= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = == = = =

திங்கள், மார்ச் 14, 2016

ஆடை மாடம் = WARDROBE

புதுச்சொல் புனைவோம் !
= = = = = = = = = = = = = =
ஆடை மாடம் = WARDROBE
= = = = = = = = = = = = = =
========================================================================
[ பாவையும் எழில்மதியும் அறைகலன் வில்லூரி  ( FURNITURE MART ) ஒன்றில் சந்திக்கின்றனர் ]
========================================================================

பாவை........: எழில் ! நீயெங்கே இங்கே ?

எழில்........... “ஸ்டீல் பீரோ” ஒன்று வாங்கலாம் என்று வந்தேன் ! அப்பா சற்று நேரம் கழித்து வருவார் !


பாவை........: நீ “ஸ்டீல் பீரோ” (STEEL BUREAU) வாங்கப் போகிறாயா, “ஸ்டீல் கப்போர்டு” (STEEL CUPBOARD) வாங்கப் போகிறாயா அல்லது “ஸ்டீல் அல்மிரா” (ALMIRAH) வாங்கப் போகிறாயா ?


எழில்...........: என்ன பாவை ! என்னை இப்படிக் குழப்புகிறாய் ? 

பாவை........: ஆமாம் எழில் ! 

“பீரோ” என்றால் இழுவறையுள்ள சாய் தள எழுது மேசை. இதை ”சாய்தள மேசை” என்று சொல்லலாம். ( BUREAU MEANS WRITTING DESK WITH DRAWERS) ”கப்போர்டு” என்பது ”நிலைமாடம்” (CUPBOARD MEANS SHELVED CLOSET OR CABINET FOR CROCKERY, PROVISIONS etc.) 

 
“அல்மிரா (அலமாரி)” என்பது “நிலைப்பேழை” (ALMIRAH MEANS WARDROBE OR MOVABLE CUPBOARD) 


“வார்டுரோப்” என்பது “ஆடை மாடம்” ( WARDROBE MEANS PLACE WHERE CLOTHES ARE KEPT, esp., LARGE CABINET OR MOVABLE 


“ரேக்” என்பது “ நிலையடுக்கு”. (RACK MEANS FIXED OR MOVABLE FRAME OF WOODEN OR METAL BARS FOR HOLDING FODDER, PLATE, HAT, TOOLS, PIPE etc.).
 

ஆனால், நாம் பீரோ, அல்மிரா, கப்போர்டு என்ற பல பெயர்களால் ஒரே பொருளைத்தான் சொல்கிறோம் !
எழில்..........:என்ன பாவை ! ஒவ்வொன்றுக்குமிடையே வேறுபாடுகள் உளவா ? சுருக்கமாக அவற்றின் பெயர்களை மீண்டும் சொல்லேன் !

பாவை.......:பீரோ.................= சாய்தள மேசை
          கப்போர்டு.... = நிலைமாடம்
          அல்மிரா....... = நிலைப்பேழை
          வார்டுரோப்...= ஆடை மாடம்
          ரேக்....................= நிலையடுக்கு

எழில்.......:...:நான் நிலைப்பேழை தான் வாங்க வந்திருக்கிறேன் பாவை ! ஆமாம் மேசை என்பது தமிழ்ச் சொல்லா ?

பாவை.......:அதிலென்ன ஐயம் ? மேல் + செய்= மேல்செய் > மேசெய் > மேசை. நான்கு காலகளில் நிறுத்தப்பட்டு கிடை வசத்தில் இருக்குமாறு கோக்கப்பட்டுள்ள பலகையின் மேல் வைத்துத் தான் நாம் எழுதுதல், வரைதல், படித்தல் போன்ற பணிகளைச் செய்கிறோம். அதனால் தான் (மேல் செய்) மேசை என்ற பெயர் வந்தது. 

எழில்........: அப்புறம் ?

பாவை.......:“சோபா” என்பது ”சாய்மணை”. “ஸ்டூல்” என்பது “பாண்டில்”. “டீப்பாய்” என்பது தேநீர் மேசை. போதுமா ?

எழில்........: இன்று இவ்வளவு போதும் ! நீ சென்று வா ! நான் நிலைப்பேழை வாங்கிக் கொண்டு வருகிறேன்.
=======================================================================
”உல்” = உள்ளொடுங்கற் கருத்து வேர். (பாவாணரின் வேர்ச் சொற்கட்டுரைகள்.) உள்ளொடுங்கல் = குறிப்பிட்ட வரம்புக்குள் அடங்குதல்.
உல் > உர் .> ஊர் > ஊரி
=======================================================================
கல் + ஊரி.... = கல்லூரி
வில் + ஊரி...= வில்லூரி
=======================================================================
கல்லூரி.............= குறிப்பிட்ட வளாக வரம்புக்குள் ஒடுங்கி இருப்பது, இந்த கல்வி கற்பிக்குமிடம்

வில்லூரி..... = குறிப்பிட்ட கட்டட வரம்புக்குள் அடங்கி, ஒடுங்கி இருப்பது இந்த விற்பனை நிலையம்.
=======================================================================

         

செவ்வாய், மார்ச் 08, 2016

வாலை = BACHELOR : மேதை = MASTER

புதுச்சொல் புனைவோம் !
= = = = = = = = = = = = ==
BACHELOR = வாலை
MASTER......= மேதை

= = = = = = = = = = = = = =

பல்கலைக் கழகங்கள் எனக்குத் தெரிந்த வரை மூன்று விதமான பட்டங்களை வழங்குகின்றன. இளம், முது என்ற முன்னொட்டுடன் சிலவகைப் பட்டங்களும், முனைவர் என்ற பட்டமும் இவற்றுள் அடங்கும்.

BACHELOR OF ARTS என்பதை இளங்கலை என்றும், இப்பட்டம் பெற்றவரை கலை ”இளைஞர்” என்றும்சொல்கிறோம். BACHELOR OF SCIENCE என்பதை இளம் அறிவியல் என்றும், இப்பட்டம் பெற்றவரை அறிவியல் ”இளைஞர்” என்றும் சொல்கிறோம். BACHELOR OF COMMERCE என்பதை இளம் வணிகவியல் என்றும் இப்பட்டம் பெற்றவர்களை வணிகவியல் ”இளைஞர் என்றும் பல்கலைக் கழகங்கள் குறிப்பிடுகின்றன.

இளம் என்பது ”இளமை” என்ற பொருளிலேயே இங்கு குறிப்பிடப்படுகிறது. ”இளம்” என்பதைக் குறிக்க“வால்” என்ற வேர்ச்சொல் தமிழில் உள்ளது. இந்த வேர்ச் சொல்லிலிருந்து கிளைத்திருக்கும் பிற சொற்களைப்பாருங்கள்.

வால் -- இளமை
வாலகன் -- இளைஞன்
வாலச்சந்திரன் -- இளம் பிறை
வாலம் -- வாலிபம்
வாலவயது -- இளவயது
வாலை -- இளையது, 12 வயதுப் பெண்


வாலை என்பது “இளையது” அல்லது “இளநிலை” என்னும் பொருளைக் குறிக்கும் சொல் என்பதால் BACHELOR என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லாக “வாலை” என்பதை நாம்பயன்படுத்தலாம். எண்பது வயதான B.A. பட்டம் பெற்ற ஒருவரை கலை ”இளைஞர்” என்று சொல்வது சங்கடமான ஒன்று. ஆனால் அவரை கலை “வாலை” என்று சொல்வதில் அவ்வளவு சங்கடம் தோன்றாது.

MASTER OF ARTS என்பதை முது கலை என்றும் இப்பட்டம் பெற்றவரைக் கலை முதுவர் அல்லது முதியர்என்றும் சொல்கிறார்கள். MASTER OF SCIENCE என்பதை முது அறிவியல் என்றும் இப்பட்டம் பெற்றவரை அறிவியல் முதுவர் அல்லது முதியர் என்றும் சொல்கிறார்கள். இவை ஒலி நயமில்லாத, இனிமைக்குறைவான சொற்களாகத் தோன்றுகின்றன.

தமிழில் “மே” என்ற சொல் “மேன்மை” நிலையைக் குறிக்கும். இந்த வேர்ச் சொல்லின் அடிப்படையில்உருவாகி இருக்கும் வேறு சில சொற்களையும் பார்ப்போம்.

மே = மேன்மை
மேல் = உயர்வு
மேட்டிமை  = மேன்மை
மேதகு = மேன்மையான
மேதாவி = அறிவாளி
மேது  = அறிவு
மேதையர் = புலவர்
மேதை = அறிஞன், அறிவு, பேரறிவு, மேன்மை

“பேச்சலர்” என்பவர் அறிவில் இளைய நிலையில் உள்ளவர் என்றால் “மாஸ்டர்” என்பவர் அறிவில்“மேன்மை” நிலை உடையவர் என்று கொள்ளலாம் அல்லவா ? எனவே “மாஸ்டர்” என்ற ஆங்கிலச்சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லாக “மேதை” என்பதை நாம் ஏற்கலாம். “மேதை” என்றால் அவர்அறிவின் உச்சத்தைத் தொட்டவர் என்று கருத வேண்டியதில்லை. உச்ச நிலை அடைந்தவரை “மாமேதை”என்று அழைக்கலாம்.

“டாக்டர்” என்ற ஆங்கிலச் சொல் தமிழில் “முனைவர்” என்று சொல்லாக்கம் பெற்றுள்ளது. இதனை நாம்அப்படியே ஏற்கலாம். “வாலை”, ”மேதை” என்ற புதிய சொற்களின் அடிப்படையில் பல்கலைக் கழகப்பட்டங்களைத் தமிழாக்கம் செய்வோமா !

B.A = க.வா (கலை வாலை)
B.Sc = அறி. வா (அறிவியல் வாலை)
B.Com = வணி.வா (வணிகவியல் வாலை)
B.Lit = இல.வா (இலக்கிய வாலை)
B.B.A = மே.வா (மேலாண்மையியல் வாலை)
B.C.A = க.ப.வா (கணினிப் பயனியல் வாலை)
B.Ed = கல்.வா (கல்வியியல் வாலை)
B.L = ச.வா (சட்டவியல் வாலை)
B.E = பொறி.வா (பொறியியல் வாலை)
B.Tech = நு.வா (நுட்பவியல் வாலை)
B.V.Sc = கா.அறி.வா (கால்நடை அறிவியல் வாலை)
B.S = அரி.வா (அரிவியல் வாலை)
B.D.S = பல்.அரி.வா (பல் அரிவியல் வாலை)
B.Arc = கட்.சி.வா (கட்டடச் சிற்பவியல் வாலை)
B.Mus = இசை.வா (இசையியல் வாலை)
B.Li.S = நூ.அறி.வா (நூலக அறிவியல் வாலை)
B.Pharm = மரு. வா (மருந்தியல் வாலை)
M.B = உறை.வா (உறையியல் வாலை)


(SURGERY = அரி > அரிதல் >அரிவியல் )

( M.B.B.S = உறை.வா.,அரி.வா )

M.A = க.மே (கலையியல் மேதை)
M.Sc = அறி.மே (அறிவியல் மேதை)
M.Com = வணி.மே (வணிகவியல் மேதை)
M.Lit = இல.மே (இலக்கிய மேதை)
M.B.A = மே.மே (மேலாண்மையியல் மேதை)
M.C.A = க.ப.மே (கணினிப் பயனியல் மேதை)
M.Ed = கல்.மே (கல்வியியல் மேதை )
M.L = ச.மே (சட்டவியல் மேதை)
M.E = பொறி.மே (பொறியியல் மேதை)
M.Tech = நு.மே (நுட்பவியல் மேதை)
M.V.Sc = கா..அறி.மே (கால்நடை அறிவியல் மேதை)
M.S = அரி.மே (அரிவியல் மேதை)
M.D = உறை..மே (உறையியல் மருத்துவ மேதை)
M.D.S = பல்.அரி.மே (பல் அரிவியல் மேதை)
M.Mus = இசை.மே (இசையியல் மேதை)
M.LIS = நூ.அறி.மே (நூலக அறிவியல் மேதை)
M.Pharm = மரு.மே (மருந்தியல்மேதை)
M.Phil = மெய்.மே (மெய்யியல் மேதை.)
M.Arc = கட்.சி.மே (கட்டடச் சிற்பவியல் மேதை)
Ph.D = முனை. (முனைவர்)


ஞாயிறு, மார்ச் 06, 2016

உருளி = CYCLE

புதுச்சொல்புனைவோம் !

= = = = = = = = = = =
உருளி = CYCLE
= = = = = = = = = = =

மேலை நாட்டினரால் கண்டுபிடிக்கப் பெற்ற “சைக்கிள்” வண்டிக்கு இரண்டு சக்கரங்கள் உடைய வண்டி என்ற கருத்தில் “பை-சைக்கிள்” என்று பெயரிடப்பட்டது. காலப் போக்கில் “பை-சைக்கிள்” மறைந்து “சைக்கிள்” என்ற சொல் நிலைபெற்று விட்டது.

“பை-சைக்கிள்” என்பதை தமிழில் மொழிபெயர்த்த வடமொழி ஆர்வலர்கள் அதை ”துவிச்சக்கர வண்டி” என்றனர். பின்னாளில் அது “இரு சக்கர வண்டி” ஆயிற்று. வேறு சில தமிழறிஞர்கள் அதை “மிதி வண்டி” என்று அழைக்கலாயினர்.


வில்லூரி = MART, STORES, STALL, EMPORIUM,SHOP


புதுச் சொல் புனைவோம் !

= = = = = = = = = = = = = = = = = = = = = = = = =
வில்லூரி = EMPORIUM, MART, STORES
= = = = = = = = = = = = = = = = = = = = = = = = =

“உல்” என்னும் வேர்ச் சொல் உள்ளொடுங்கும் கருத்தை உணர்த்துவது. உள்ளொடுங்கல் என்றால் குறிப்பிட்ட வரம்புக்குள் அடங்குதல் என்று பொருள்!

உல் > உர் > ஊர் = நாற்புறமும் எல்லைகளைக் கொண்டு, அவ்வெல்லைகளுக்கு உள்ளொடுங்கி அமைவதால் தான் அதற்கு “ஊர்” என்று பெயர். சிற்றூர், பேரூர் எதுவாக இருந்தாலும், நாற்புறமும் எல்லைகளைக் கொண்டு அவற்றுக்கு இடையே தானே அவை அமைகின்றன ! 

”உல்” எனும் வேர்ச்சொல், உல் > உர் > ஊர் > ஊரி என்று திரிந்து “குறிப்பிட்ட வரம்புகளுக்கு உட்பட்டு அமைந்துள்ள இடம்“ என்ற பொருளை உணர்த்தும். 

செவ்வாய், மார்ச் 01, 2016

எழினி = CELL PHONE

புதுச்சொல் புனைவோம் !


= = = = = = = = = = = = = = =
எழினி = CELL PHONE
= = = = = = = = = = = = = = =

ஆசிரியர் : பரிதி ! ”செல்போன்” (Cell phone) என்பதைத் தமிழில் எவ்வாறு சொல்லலாம் ?

பரிதி....... : ஐயா ! “செல்போன்” என்பதற்குத் தமிழில் பல சொற்கள் உள்ளன. “அலைபேசி”, “செல்பேசி”, “செல்லிடப் பேசி”, “எழினி”, இப்படிப் பல சொற்கள். இருந்தாலும் என்னைக் கவர்ந்த சொல் “எழினி” தான் !

ஆசிரியர் : ஏன் ? “எழினி” என்ற சொல்லுக்கு விளக்கம் சொல் பார்ப்போம் ?

செவ்வாய், பிப்ரவரி 09, 2016

எண்மம் = DIGITAL

புதுச்சொல் புனைதல் !
DIGITAL = எண்மம்

”எண் என்ப ஏனை எழுத்து என்ப இவ்விரண்டும் கண் என்ப வாழும் உயிர்க்கு” என்பது வள்ளுவர் வாக்கு. ”எண் எழுத்து இகழேல்” என்பது ஔவையாரின் அருள்மொழி.

சுழி (Zero) தொடங்கி 1, 2, 3, என்று தொடர்பவை “எண்” என்பது அனைவருக்கும் தெரியும். இதை ஆங்கிலத்தில் “டிஜிட்” (DIGIT) என்று சொல்கிறார்கள். “எண்” என்பதை “இலக்கம்” என்றும் தமிழில் சொல்வதுண்டு.

கணினியில் நாம் “தமிழ்” என்று உள்ளீடு செய்து, அதைச் “சேமிக்க” (SAVE), கட்டளை தருவதாக வைத்துக் கொள்வோம். கணினியின் நினைவகத்தில் அச்சொல் “தமிழ்” என்று பதிவு செய்யப்படுவதில்லை. ”சுழி” (ZERO) மற்றும் ”ஒன்று” (ONE) ஆகிய இரண்டே எண்களின் (BINARY NUMBERS) நாண்களாகவே (Strings) அது பதிவாகிறது. [ STRING என்பதற்கு, நாண், மெல்லிய கயிறு, நாடா, முறுக்குநூல், இழை, கோவை என்றெல்லாம் பொருளுண்டு. ]